:4410 பேருக்கு புதிதாக கரோனா பாதிப்பு
சென்னை: தமிழ்நாட்டில் கரோனா வைரஸ் தொற்று பாதிப்பின் எண்ணிக்கை குறைந்து வருவதுடன், நோய் தொற்றினால் ஏற்படும் இறப்புகளின் எண்ணிக்கையும் கணிசமாக குறைகிறது.
மக்கள் நல்வாழ்வுத்துறை இன்று (அக்டோபர் 15)வெளியிட்டுள்ள புள்ளி விவர தகவலில் கூறியிருப்பதாவது:
தமிழ்நாட்டில் புதிதாக இன்று 89 ஆயிரத்து 67 நபர்களுக்கு கரோனா வைரஸ் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. அவர்களில் தமிழ்நாட்டிலிருந்து 4 ஆயிரத்து 410 நபர்களுக்கு கரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
மாநிலத்தில் இதுவரை 81 லட்சத்து 29 ஆயிரத்து 741 நபர்களுக்கு ஆர்டிபிசிஆர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. அவர்களில் 6 லட்சத்து 74 ஆயிரத்து 802 நபர்கள் வைரஸ் நோய் தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இதில் மருத்துவமனைகள் மற்றும் தனிமைப்படுத்தும் மையங்களில் தற்போது 41 ஆயிரத்து 872 நபர்கள் சிகிச்சை பெற்று வருகின்றனர். சிகிச்சை பெற்று வந்தவர்களில் குணமடைந்த 5 ஆயிரத்து 55 நபர்கள் வீட்டுக்கு இன்று அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். இதன்மூலம் குணமடைந்தவர்கள் எண்ணிக்கை 6 லட்சத்து 22 ஆயிரத்து 458ஆக உயர்ந்துள்ளது.
கரோனாவுக்காக சிகிச்சை பெற்று வந்தவர்களில், சிகிச்சை பலனின்றி தனியார் மருத்துவமனையில் 22, அரசு மருத்துவமனையில் 27 என 49 நபர்கள் இறந்துள்ளனர். இதனால் இறந்தவர்களின் எண்ணிக்கை 10 ஆயிரத்து 472ஆக உயர்ந்துள்ளது.
மாவட்ட வாரியாக பாதிப்பு நிலவரம்
சென்னை மாட்டம் 1,86,667
செங்கல்பட்டு மாவட்டம் 40416
கோயம்புத்தூர் மாவட்டம் 38,712
திருவள்ளூர் மாவட்டம் 35,545
காஞ்சிபுரம் மாவட்டம் 24073
சேலம் - 24455
கடலூர் - 22,163
மதுரை - 17,790
திருவண்ணாமலை - 16,864
வேலூர் மாவட்டம் 16731
தேனி மாவட்டம் 15846
விருதுநகர் மாவட்டம் 15028
ராணிப்பேட்டை மாவட்டம் 14326
தூத்துக்குடி மாவட்டம் 14325
கன்னியாகுமரி மாவட்டம் 14,086
தஞ்சாவூர் மாவட்டம் 14184
திருநெல்வேலி மாவட்டம் 13733
விழுப்புரம் மாவட்டம் 12859
திருச்சிராப்பள்ளி மாவட்டம் 11642
திருப்பூர் மாவட்டம் 10690
புதுக்கோட்டை மாவட்டம் 10100
கள்ளக்குறிச்சி மாவட்டம் 9829
திண்டுக்கல் மாவட்டம் 9479
திருவாரூர் மாவட்டம் 8765
ஈரோடு மாவட்டம் 8772
தென்காசி மாவட்டம் 7690
நாமக்கல் மாவட்டம் 7714
நாகப்பட்டினம் மாவட்டம் 6060
ராமநாதபுரம் மாவட்டம் 5817
திருப்பத்தூர் மாவட்டம் 5963
சிவகங்கை மாவட்டம் 5583
கிருஷ்ணகிரி மாவட்டம் 5839
நீலகிரி மாவட்டம் 5821
தருமபுரி மாவட்டம் 4966
அரியலூர் மாவட்டம் 4209
கரூர் மாவட்டம் 3702
பெரம்பலூர் மாவட்டம் 2023
சர்வதேச விமானத்தில் வந்தவர்கள் 925
உள்நாட்டு விமானத்தில் வந்தவர்கள் 982
ரயில் மூலம் வந்தவர்கள் 428