இதுதொடர்பாக மக்கள் நல்வாழ்வுத் துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், "தமிழ்நாட்டில் மேலும் 5 ஆயிரத்து 986 பேருக்கு கரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதில், தமிழ்நாட்டில் 5 ஆயிரத்து 967 பேரும், வெளிமாநிலம் மற்றும் வெளிநாடுகளிலிருந்து வந்தவர்கள் 19 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இதுவரை, கரோனா பாதிப்பு 3 லட்சத்து 61 ஆயிரத்து 435 ஆக உயர்ந்துள்ளது. சென்னையில், இன்று(ஆக.20) ஆயிரத்து 177 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். மொத்த பாதிப்பு 1 லட்சத்து 21 ஆயிரத்து 450 ஆக உயர்ந்துள்ளது. தமிழ்நாட்டில் 22 நாள்களுக்கும் மேலாக கரோனா பாதிப்பு ஆறாயிரத்துக்கு கீழ் பதிவாகியுள்ளது.
இன்று கரோனா பாதிப்பால் 116 பேர் உயிரிழந்தனர். இதனால், உயிரிழந்தோர் எண்ணிக்கை 6 ஆயிரத்து 239 ஆக அதிகரித்துள்ளது. இன்று மட்டும் 5 ஆயிரத்து 742 பேர் குணமடைந்துள்ளனர். மொத்தம் 3 லட்சத்து ஆயிரத்து 913 பேர் குணமடைந்துள்ளனர். தமிழ்நாட்டில், இதுவரை 53 ஆயிரத்து 283 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இன்று மட்டும் 73 ஆயிரத்து 162 நபர்களுக்கு பரிசோதனை செய்யப்பட்டது. தமிழ்நாட்டில் இதுவரை 38 லட்சத்து 51 ஆயிரத்து 411 நபர்களுக்கு பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில், அரசு சார்பில் 63, தனியார் 76 என மொத்தம் 139 கரோனா பரிசோதனை ஆய்வகங்கள் உள்ளன.
மாவட்ட வாரியாக பாதிப்பு
- சென்னை - 1,21,450
- செங்கல்பட்டு - 22,286
- திருவள்ளூர் - 21402
- காஞ்சிபுரம் - 14,842
- மதுரை - 13,149
- விருதுநகர் - 11791
- தூத்துக்குடி - 10293
- தேனி - 11009
- கோயம்புத்தூர் - 10558
- திருவண்ணாமலை - 9129
- வேலூர் - 8932
- ராணிப்பேட்டை - 8914
- திருநெல்வேலி - 8048
- கன்னியாகுமரி - 8091
- கடலூர் - 7845
- சேலம் - 7123
- திருச்சிராப்பள்ளி - 6335
- விழுப்புரம் - 5648
- கள்ளக்குறிச்சி - 5180
- தஞ்சாவூர் - 5358
- திண்டுக்கல் - 5303
- புதுக்கோட்டை - 4660
- ராமநாதபுரம் - 4199
- தென்காசி - 4355
- சிவகங்கை - 3593
- திருவாரூர் - 2612
- திருப்பத்தூர் - 2299
- அரியலூர் - 2030
- கிருஷ்ணகிரி - 1710
- நாகப்பட்டினம் - 1737
- திருப்பூர் - 1744
- ஈரோடு - 1804
- நாமக்கல் - 1411
- நீலகிரி - 1178
- கரூர் - 1167
- தருமபுரி - 1070
- பெரம்பலூர் - 1076
இதையும் படிங்க: சென்னை பல்கலைக்கழகத்திற்கு புதிய துணைவேந்தராக எஸ்.கெளரி நியமனம்!