தமிழ்நாடு மக்கள் நல்வாழ்வுத் துறை இன்று (மார்ச் 27) வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்திருப்பதாவது:
தமிழ்நாட்டில் புதிதாக 85 ஆயிரத்து 173 நபர்களுக்கு கரோனா வைரஸ் (தீநுண்மி) தொற்று பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டன. மேற்கு வங்கம், கேரள, கர்நாடகா, குஜராத்திலிருந்து வந்த தலா ஒரு நபர் என மொத்தம் 2,084 நபர்களுக்கு கரோனா வைரஸ் தொற்று புதிதாகக் கண்டறியப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் இதுவரை ஒரு கோடியே 92 லட்சத்து 62 ஆயிரத்து 447 நபர்களுக்கு ஆர்டி-பிசிஆர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதன்மூலம் தமிழ்நாட்டிலிருந்து எட்டு லட்சத்து 77 ஆயிரத்து 279 நபர்களுக்கு கரோனா தீநுண்மி தொற்று இருப்பது கண்டறியப்பட்டது. அவர்களில் தற்போது மருத்துவமனைகள், தனிமைப்படுத்தும் மையங்களில் 12 ஆயிரத்து 157 நபர்கள் சிகிச்சைப் பெற்றுவருகின்றனர்.
மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று குணமடைந்து இன்று (மார்ச் 27) 1,241 பேர் வீடு திரும்பியுள்ளனர். இதன்மூலம் குணமடைந்தவர்கள் எண்ணிக்கை எட்டு லட்சத்து 52 ஆயிரத்து 463 என அதிகரித்துள்ளது. அதேபோல் சிகிச்சைப் பலனின்றி அரசு மருத்துவமனையில் ஐந்து பேர், தனியார் மருத்துவமனையில் நான்கு பேர் என மொத்தம் ஒன்பது பேர் இன்று (மார்ச் 27) உயிரிழந்தனர். இதன்மூலம் இறந்தவர்களின் எண்ணிக்கை 12 ஆயிரத்து 659 என உயர்ந்துள்ளது.
ஜனவரி 8ஆம் தேதிமுதல் இன்றுவரை வெளிநாட்டிலிருந்து 3,654 நபர்கள் வருகைதந்துள்ளனர். அவர்கள் அனைவருக்கும் கரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதில் 13 நபர்களுக்கு கரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டது. மீதமுள்ள 3,213 நபர்களுக்கு கரோனா தொற்று இல்லை எனச் சுகாதாரத் துறையினர் தெரிவித்துள்ளனர்.