இன்றைய கரோனா பாதிப்பு விவரத்தை தமிழ்நாடு சுகாதாரத் துறை வெளியிட்டுள்ளது. தமிழ்நாட்டில் மேலும் 5 ஆயிரத்து 914 பேருக்கு கரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதில், 5 ஆயிரத்து 879 பேர் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்கள். 35 பேர் வெளிமாநிலம், வெளிநாடுகளிலிருந்து வந்தவர்கள். தற்போது தமிழ்நாட்டில் கரோனா பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 3லட்சத்து 3 லட்சத்து 2 ஆயிரத்து 815ஆக உயர்ந்துள்ளது.
சென்னையில் இன்று மட்டும் 976 பேர் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். சென்னையில் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 1 லட்சத்து 10 ஆயிரத்து 121ஆக அதிகரித்துள்ளது. இன்று அதிகபட்சமாக 114 பேர் கரோனாவால் உயிரிழந்தனர். இதில், அரசு மருத்துவமனையில் 80 பேரும், தனியார் மருத்துவமனையில் 34 பேரும் உயிரிழந்தனர். இதன் மூலம் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 5 ஆயிரத்து 41ஆக அதிகரித்துள்ளது. இன்று, 6 ஆயிரத்து 37 பேர் குணமடைந்து வீட்டிற்கு திரும்பிய நிலையில், குணமடைந்தோர் எண்ணிக்கை 2 லட்சத்து 44 ஆயிரத்து 675ஆக உயர்ந்துள்ளது.
சென்னையில் தொற்றால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கையை விட, குணமடைந்தோரின் எண்ணிக்கை சில நாள்களாக அதிகரித்துவருகிறது. அதே நேரத்தில் மருத்துவமனைகளில் இறப்பவர்களின் எண்ணிக்கை இன்று 25 நபர்களாக உள்ளது. இன்று மட்டும் 65 ஆயிரத்து 141 பேருக்கு பரிசோதனைகள் செய்யப்பட்டன. மாநிலத்தில் இதுவரை 31 லட்சத்து 74 ஆயிரத்து 849 பேருக்கு மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டுள்ளன.
கரோனா பாதிப்பாளர்கள் மருத்துவமனைகள், தனிமைப்படுத்தும் முகாம்களில் 53 ஆயிரத்து 99 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். தமிழ்நாட்டில் 61 அரசு பரிசோதனை மையங்கள், 69 தனியார் மையங்கள் என மொத்தம் 130 ஆய்வகங்கள் உள்ளன.
மாவட்ட வாரியாக பாதிப்பு
- சென்னை - 1,10,121
- செங்கல்பட்டு - 18,332
- திருவள்ளூர் - 17,340
- காஞ்சிபுரம் - 12,131
- மதுரை - 12,104
- விருதுநகர் - 10,155
- தூத்துக்குடி - 9,357
- தேனி - 8,257
- திருவண்ணாமலை - 7,988
- வேலூர் - 7,546
- ராணிப்பேட்டை - 7,151
- கோயம்புத்தூர் - 6,961
- திருநெல்வேலி - 6,662
- கன்னியாகுமரி - 6,553
- திருச்சிராப்பள்ளி - 5,170
- கடலூர் - 5,061
- சேலம் - 4,744
- விழுப்புரம் - 4,620
- கள்ளக்குறிச்சி - 4,564
- தஞ்சாவூர் - 4,215
- திண்டுக்கல் - 4,051
- ராமநாதபுரம் - 3,682
- புதுக்கோட்டை - 3,324
- தென்காசி - 3,246
- சிவகங்கை - 2,996
- திருவாரூர் - 2,026
- திருப்பத்தூர் - 1,689
- கிருஷ்ணகிரி - 1,480
- அரியலூர் - 1,345
- நாகப்பட்டினம் - 1,204
- திருப்பூர் - 1,197
- ஈரோடு - 1,101
- நாமக்கல் - 1,020
- நீலகிரி - 965
- தருமபுரி - 898
- கரூர் - 816
- பெரம்பலூர் - 735
சர்வதேச விமானத்தில் வந்தவர்கள் - 863
உள்நாட்டு விமானத்தில் வந்தவர்கள் - 701
ரயில் மூலம் வந்தவர்கள் - 426
இதையும் படிங்க: அங்கொடா லொக்கா மரண வழக்கில் புதிய தகவல்!