சென்னை: தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் கே.எஸ். அழகிரி தனது 69ஆவது வயதை நாளை எட்டவுள்ளார், இதனைக் கொண்டாடும் பொருட்டு காங்கிரஸ் கழகத்தினர் சில ஏற்பாடுகளை செய்துவருகின்றனர்.
இதுதொடர்பாக கருத்து தெரிவித்துள்ள கே.எஸ். அழகிரி, “எனது பிறந்தநாளை கொண்டாடுகிற வகையில் நாளை (அக். 22) சத்தியமூர்த்தி பவனில் ஏற்பாடுகளை தோழர்கள் செய்துவருவதை அறிந்தேன்.
கரோனா பரவல் இருக்கும் நேரத்தில் திரளானவர்கள் என்னை சந்தித்து பிறந்தநாள் வாழ்த்துக் கூறுவதை தவிர்க்க விரும்புகிறேன். எனவே, என்னை சந்தித்து வாழ்த்து கூற யாரும் வர வேண்டாம் என அன்போடு கேட்டுக் கொள்கிறேன்.
என் மீது அன்பு கொண்டு நேரில் வாழ்த்து சொல்ல விரும்பிய அனைத்து இயக்கத் தோழர்களுக்கும் எனது அன்பையும், நன்றியையும் தெரிவித்துக் கொள்கின்றேன்” எனக் கூறியுள்ளார்.
முன்னதாக கரோனா பரவலைக் கருத்தில் கொண்டு முன்னாள் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, திமுக தலைவர் ஸ்டாலின் உள்ளிட்டோர் தங்களது பிறந்தநாளைக் கொண்டாட தவிர்த்தது குறிப்பிடத்தக்கது.