இது குறித்து அவர் வெளியிட்ட அறிக்கையில்,
"இந்திய விடுதலைக்குப் பிறகு நடைபெற்ற 17ஆவது மக்களவைத் தேர்தலில் மக்களை மதரீதியாக பிளவுபடுத்துவதில் பல்வேறு உத்திகளை கையாண்டு பாஜக ஆட்சியை அசுர பலத்தோடு கைப்பற்றியிருக்கிறது. மக்களவையில் 543 இடங்களில் 303 இடங்களில் பாஜக வெற்றி பெற்றிருக்கிறது. இதில் ஒருவரைத் தவிர சிறுபான்மை சமுதாயத்தைச் சேர்ந்த இஸ்லாமியரோ, கிறிஸ்தவரோ இல்லை என்கிற செய்தி மதச்சார்பற்ற சக்திகளுக்கு கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.
இத்தகைய சவால்மிக்க தருணத்தில்தான் சிறுபான்மை சமுதாயத்தினர் ரமலான் நோன்பு திறப்பு நிகழ்ச்சி நடத்த வேண்டிய நிலை ஏற்பட்டிருக்கிறது. இருப்பினும் இந்த இனிய ஈகைத் திருநாளில் தக்பீர் முழக்கம் கூறி, தொழுது, அதற்கு முன்னர் ஏழைகளுக்கு 'சதக்கத்துல் பித்ர்' என்னும் பெருநாள் கொடை வழங்கி, அனைவருடன் உணவருந்தி மகிழும் இஸ்லாமிய பெருமக்கள் அனைவருக்கும் தமிழ்நாடு காங்கிரஸ் கட்சி சார்பில் இனிய ரமலான் நல்வாழ்த்துக்களை மகிழ்வுடன் தெரிவித்துக் கொள்கிறேன்" என்று குறிப்பிட்டுள்ளார்.