தமிழ்நாட்டில் தேர்தல் நடந்து முடிந்ததைத் தொடர்ந்து டெல்லி, தமிழ்நாடு என்று சுற்றிக் கொண்டே இருக்கும் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு திடீரென்று உடல்நலக் குறைவு ஏற்பட்டுள்ளது. இதற்காக நேற்று சென்னை அப்போலோ மருத்துவமனையில் சிகிச்சை பெறவந்துள்ளார். அங்கு பரிசோதனை முடிந்தபிறகு உடனடியாக வீட்டுக்குத் திரும்பிய அவர் ஓய்வில் இருந்துள்ளார்.
இந்நிலையில் இன்றும் அவர் அப்போலோ மருத்துவமனையில் சிகிச்சைக்காக வந்து சிறுநீர், ரத்த பரிசோதனைகளை மேற்கொண்டு உடனடியாக வீட்டுக்குத் திரும்பிவிட்டார். அதே மருத்துவமனையில் திமுக பொருளாளர் துரைமுருகனும் சிகிச்சை பெற்றுவருகிறார்.
தேர்தலில் சூறாவளி பயணம் முடித்த தலைவர்கள் வெளியூர் சென்று ஓய்வெடுத்து வருகின்றனர். துணை முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் கோவையில் ஆயுர்வேத சிகிச்சை எடுக்கச் சென்றுள்ளார். திமுக தலைவர் ஸ்டாலின் குடும்பத்துடன் சிங்கப்பூரில் ஓய்வெடுத்து வருவது குறிப்பிடத்தக்கது.