சென்னை: தமிழ்நாடு அரசு சார்பில் இன்று (செப் 5) மூன்று புதிய திட்டங்கள் தொடங்கப்பட உள்ளன. அந்த வகையில் 15 மாதிரி பள்ளிகள், 26 சீர்மிகு பள்ளிகள் தொடக்க விழா, கல்லூரி மாணவியருக்கு மாதம் ரூ.1,000 வழங்கும் திட்டம் தொடங்கப்பட உள்ளது. முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார். இந்த விழாவில் டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் கலந்துகொள்கிறார். இதற்காக நேற்று சென்னை வந்தடைந்தார். அவருக்கு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் விமான நிலையத்தில் வரவேற்பு அளித்தார்.
தமிழ்நாட்டில் அரசு பள்ளிகளில் 6 முதல் 12 வரை பயின்ற மாணவிகள், உயர்கல்வி, பட்டயப்படிப்பு, தொழிற்படிப்பு படிக்க ஏதுவாக மாதம் ரூ.1,000 நேரடியாக அவர்களது வங்கி கணக்கில் செலுத்தப்படும் என்று தமிழ்நாடு அரசு அறிவித்தது. இந்த திட்டத்திற்கு புதுமைப்பெண் திட்டம் என்று பெயரிடப்பட்டது. இந்த திட்டம் இன்று முதல் பயன்பாட்டிற்கு வர உள்ளது.
இதையும் படிங்க: "கேரள முதலமைச்சருக்கு நன்றியும், பாராட்டும்" - முதலமைச்சர் ஸ்டாலின்