கரோனா தடுப்புப் பணியில் ஈடுபட்டுள்ள மருத்துவர்கள், செவிலியர்கள், காவல் துறையினர் உள்ளிட்ட அனைவருக்கும் கரோனாவால் பாதிக்கப்பட்டுவருகின்றனர். கரோனா காலத்தில் மக்களுக்காகச் செய்தி சேகரிக்கச் செல்லும் பத்திரிகையாளர்களும் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில், தனியார் தொலைகாட்சி ஒன்றில் ஒளிப்பதிவாளராகப் பணியாற்றிவந்த வேல்முருகன் கரோனாவால் பாதிக்கப்பட்டு, இன்று உயிரிழந்தார். அவரின் மறைவுக்குப் பலரும் ஊடகத் துறையினர் உள்பட பலரும் இரங்கல் தெரிவித்துவரும் நிலையில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியும் இரங்கல் தெரிவித்துள்ளார்.
அவர் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், ”கரோனா தொற்றால் ஒளிப்பதிவாளர் வேல்முருகன் காலமானார் என்ற செய்தியறிந்து மிகுந்த வேதனையடைந்தேன். அவரது குடும்பத்திற்கு எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறேன். மக்களுக்கும், அரசுக்கும் இடையே இணைப்புப் பாலமாக பத்திரிகையாளர்கள் உள்ளனர். ஊடக நண்பர்கள் செய்திகளைச் சேகரிக்கச் செல்லும்போது பாதுகாப்பாகச் செல்ல வேண்டும். உயிரிழந்த வேல்முருகன் குடும்பத்திற்கு 5 லட்சம் ரூபாய் நிதியுதவி அளிக்கப்படும்” என்று குறிப்பிட்டுள்ளார்.
இதையும் படிங்க: ஊடக ஒளிப்பதிவாளர் வேல்முருகன் மறைவு, ஓ.பி.எஸ். இரங்கல்