சென்னை தலைமைச் செயலகத்தில், கிருஷ்ணகிரி மாவட்டம், பாவக்கல், மேல்கொட்டாய், சின்னமேலுபள்ளி, கும்மாலபுரம் ஆகிய பகுதிகளில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளிகளில் 9 கோடியே 22 லட்சம் ரூபாய் மதிப்பீட்டிலும், நாமக்கல், திருச்செங்கோடு, பரமத்தி, போதுபட்டி அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளிகளில் 5 கோடியே 81 லட்சத்து 79 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டிலும் கட்டப்பட்டுள்ள வகுப்பறைக் கட்டடங்கள், அறிவியல் ஆய்வகங்கள், குடிநீர் வசதிகள், கழிப்பறைகள், சுற்றுச்சுவர் என மொத்தம் 15 கோடியே 3 லட்சத்து 79 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள பள்ளிக் கட்டடங்களை தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி திறந்து வைத்தார்.
ராணிப்பேட்டை மாவட்டம், புலிவலம் அரசு உயர்நிலைப் பள்ளியில் நடந்த விபத்தின் போது சமயோசிதமாக செயல்பட்டு 26 மாணவர்களை எவ்வித காயமும் இன்றி காப்பாற்றிய ஆங்கிலப் பட்டதாரி ஆசிரியை முல்லையை பாராட்டி அவருக்கு சிகிச்சை அளிக்க ஆன செலவான 14 லட்சத்து 58 ஆயிரத்து 334 ரூபாயினை முதலமைச்சர் பொது நிவாரண நிதியிலிருந்து காசோலையாக வழங்கினார்.