கேரளா, கர்நாடகா மாநிலங்களில் பெய்துவரும் கனமழையால் காவிரியில் திறக்கப்படும் நீரின் அளவு அதிகரித்துள்ளது. நேற்று வரை கர்நாடக அணைகளிலிருந்து இரண்டரை லட்சம் கனஅடி நீர் திறக்கப்பட்டது. இந்நிலையில் கபினி அணைக்கு நீர் வரத்து குறைந்ததால் தண்ணீர் திறப்பு நிறுத்தப்பட்டுள்ளது. ஆனால் கிருஷ்ணராஜ சாகர் அணையிலிருந்து 1.95 லட்சம் கனஅடி நீர் திறக்கப்பட்டுள்ளது.
இதனால், பிலிகுண்டுவுக்கு 2.20 ஆயிரம் லட்சம் கன அடி நீர் வந்து கொண்டிருந்தது. இதனைத் தொடர்ந்து மேட்டூர் அணைக்கு இன்று காலை 2.10 லட்சம் கன அடி நீர் வந்தது. இதனால் மேட்டூர் அணையின் ஒரே நாளில் 15 அடி உயர்ந்து 82 அடியைத் தாண்டியது. மேலும், நாளைக்குள் அணையின் நீர் மட்டம் 100 அடியை எட்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இதனால் டெல்டா பாசனத்துக்காக மேட்டூர் அணை நாளை திறக்கப்படுகிறது. இதனை தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி திறந்து வைக்கிறார்.