அந்த கடிதத்தில், “சுமார் ஆயிரம் மீனவர்கள் உணவு, நீர் போன்ற அடிப்படை வசதிகள் இன்றி ஈரானிலுள்ள சிறுயே, கிஷ், லாவன், பந்தர்-இ மோகம், அசலுயே உள்ளிட்ட இடங்களில் சிக்கியுள்ளனர்.
இதில் 650 தமிழ்நாட்டு மீனவர்களும் அடக்கம். ஏற்கனவே முந்தைய கடிதத்தில் (பிப்.28இல் எழுதிய கடிதம்) இதனை பற்றிய தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் ஈரானில் உள்ள இந்தியத் தூதரகத்தை தொடர்பு கொண்டு அங்கு சிக்கித் தவிக்கும் மக்களுக்கு ஆதரவு தந்து அடிப்படை வசதிகளை செய்து, அவர்களை இந்தியாவுக்கு விரைவாக திரும்புவதற்கான ஏற்பாடுகளை செய்யுமாறு கேட்டுக்கொள்கிறேன்” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.