ETV Bharat / state

மாவட்ட ஆட்சியர்களுடன் முதலமைச்சர் ஆலோசனை: என்னென்ன முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளன?

சென்னை: தலைமைச் செயலகத்தில் இருந்து காணொளி காட்சி மூலம் அனைத்து மாவட்ட ஆட்சியாளர்களுடன் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை நடத்தினார்.

சிஎம்
சிஎம்
author img

By

Published : May 13, 2020, 10:01 PM IST

இந்த ஆலோசனை கூட்டத்தில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பேசுகையில், “மருத்துவமனைகளில் இருந்து படிப்படியாக நிறைய பேர் குணமடைந்து வீடு திரும்பி வருகின்றனர். மக்கள் நெருக்கம் அதிகமாக இருப்பதால் சென்னையில் கரானா தொற்று அதிகமாக இருக்கிறது. சென்னையில் இருந்து சொந்த ஊர் திரும்பியவர்களால் வேறு மாவட்டங்களுக்கும் கரோனா தொற்று பரவியது.

கோயம்பேடு மூலம் கரோனா தொற்று ஏற்படும் என்று கணித்து முன்னரே எச்சரிக்கப்பட்டது. தங்களுக்கு இழப்பு ஏற்பட்டுவிடும் என்று அஞ்சி வியாபாரிகள் வேறு இடத்திற்குச் செல்ல மறுப்பு தெரிவித்தனர். கரோனா தொற்று குறித்து அரசு பலமுறை கோயம்பேடு வியாபாரிகளிடம் தெரிவித்து எச்சரித்தும் அவர்கள் வேறு இடங்களுக்கு செல்ல விரும்பவில்லை.

அரசு தரப்பிலிருந்து சந்தை வியாபாரிகளிடம் பலமுறை பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. வேறு இடத்திற்கு மாறுவதற்கு கோயம்பேடு வியாபாரிகள் தயக்கம் காட்டினர். அரசு நடவடிக்கை எடுக்காததால் கோயம்பேட்டில் கரோனா தொற்று அதிகரித்தது என்று கூறுவது தவறு. வெளி மாநில தொழிலாளர்கள் சொந்த மாநிலங்களுக்கு செல்ல படிப்படியாக நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. எந்தவித குறைபாடும் இல்லாமல் மக்களை அரசு பாதுகாத்து வருகிறது.

இயல்பு நிலை திரும்ப படிப்படியாக ஊரடங்கு தளர்த்தப்பட்டு வருகிறது. அரசின் நலத்திட்ட உதவிகள் மக்களுக்கு முழுமையாகச் சென்றடைவதை ஆட்சியர்கள் உறுதி செய்ய வேண்டும். வீட்டிலிருந்து வெளியே சென்றால் மாஸ்க் அணிவதுடன் தனிமனித இடைவெளியை பின்பற்ற வேண்டும். தேர்வு எழுதும் மாணவர்களுக்கு போக்குவரத்து வசதிகளை ஆட்சியர்கள் ஏற்படுத்தித் தர வேண்டும்” என்று கூறியுள்ளார்.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.