இதுகுறித்து முதலமைச்சர் வெளியிட்டுள்ள அறிக்கையில், 'பெருநகர சென்னை மாநகராட்சி, மண்டலம்-13, பகுதி-40, கோட்டம்-173க்குட்பட்ட சீனிவாசபுரத்தில் உள்ள தமிழ்நாடு குடிசை மாற்று வாரிய குடியிருப்பில் வசித்து வருபவர் குபேந்திரன். இவரது வீட்டில் கடந்த ஜூலை 15அன்று கழிவு நீர்த் தொட்டியில் ஏற்பட்டிருந்த அடைப்பைச் சரி செய்வதற்கு இறங்க முயன்ற நாகராஜூம் சயின்சாவும் விஷ வாயு தாக்கி உயிரிழந்தனர் என்ற செய்தியை அறிந்து, நான் மிகுந்த வேதனை அடைந்தேன்.
இச்சம்பவத்தில் உயிரிழந்த நாகராஜ், சயின்சா ஆகிய இரண்டு நபர்களின் குடும்பத்தினருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும் அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன். இந்தச் சம்பவத்திற்குக் காரணமான, குபேந்திரன் மீது சட்டப்படி கடும் நடவடிக்கை எடுக்க நான் உத்தரவிட்டுள்ளேன்.
மேலும் இந்தத் துயரச் சம்பவத்தில் உயிரிழந்த இரண்டு நபர்களின் குடும்பத்திற்குத் தலா பத்து லட்சம் ரூபாய் வழங்க தமிழ்நாடு குடிசை மாற்று வாரியத்திற்கு நான் உத்தரவிட்டுள்ளேன்' எனக் குறிப்பிட்டுள்ளார்.