ETV Bharat / state

சென்னையில் வெள்ளப் பாதிப்புகள் எப்போது முடிவடையும்? விரைவில் இன்ஷூரன்ஸ் கம்பெனிகளின் சிறப்பு முகாம்கள் - தலைமைச் செயலாளர் சிவ்தாஸ் மீனா - effects of Cyclone Michaung

Chennai flood update: கடைசி தெருக்களில் தண்ணீர் வடிந்து அனைத்து பணிகளையும் முடிக்கும் வரை நாங்கள் ஓய்வெடுக்க மாட்டோம் எனவும், விரைவில் சகஜ நிலை திரும்பும் எனவும், அத்தியாவசியப் பொருட்களை வியாபாரிகள் அதிகபட்ச விலைக்கு மேல் விற்றால் நடவடிக்கை எடுக்கப்படும் என தலைமைச் செயலாளர் சிவதாஸ் மீனா தெரிவித்தார்.

Etv Bharat
Etv Bharat
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Dec 6, 2023, 8:39 PM IST

Updated : Dec 6, 2023, 10:30 PM IST

தலைமைச் செயலாளர் சிவதாஸ் மீனா பேட்டி

சென்னை: சென்னையில் 14 லட்சம் லிட்டர் பால் பாக்கெட்டுகள் விநியோகம் செய்துள்ளதாகவும், வெள்ளப் பாதிப்புகள் இல்லாத பகுதிகளுக்கு விரைவில் மின் விநியோகம் சீராகும் எனவும், அத்தியாவசியப் பொருட்களை அதிக விலைக்கு விற்றால் நடவடிக்கை பாயும் எனவும், விரைவில் இன்ஷூரன்ஸ் கம்பெனிகளுடன் இணைந்து விரைவில் சிறப்பு முகாம்கள் நடத்தப்படும் எனவும் கடைசி தெருக்களில் இருந்து நீரை அகற்றும் வரை ஓயமாட்டோம் எனவும் தலைமைச் செயலாளர் சிவ்தாஸ் மீனா தெரிவித்துள்ளார்.

சென்னை உள்ளிட்ட மாவட்டங்களில் 'மிக்ஜாம் புயல்' காரணமாக மழை வெள்ளம் குடியிருப்பு பகுதிகளை சூழ்ந்துள்ளதால் பொதுமக்கள் கடும் சிரமத்திற்குள்ளாகி உள்ளனர். இதனிடையே, மழை பாதித்த பகுதிகளில் சீரமைப்புப் பணிகள் முழுவீச்சில் நடந்து வருகின்றன.

இந்நிலையில், சென்னை தலைமைச் செயலகத்தில் தலைமைச் செயலாளர் சிவதாஸ் மீனா, முதலமைச்சரின் முதன்மைச் செயலாளர் சண்முகம், உள்துறைச் செயலாளர் அமுதா, நகராட்சி நிர்வாகத்துறை செயலாளர் கார்த்திகேயன், கால்நடை மற்றும் மீன்வளத்துறை செயலாளர் குமார் ஜெயந்த், தமிழ்நாடு மின் பகிர்மானக் கழகத்தின் தலைவர் மற்றும் மேலாண்மை இயக்குநர் ராஜேஷ் லக்கானி உள்ளிட்டோர் இன்று (டிச.6) செய்தியாளர்களை சந்தித்தனர்.

அப்போது பேசிய தலைமைச்செயலாளர் சிவதாஸ் மீனா, 'நீர்நிலைக்கள் மற்றும் ஆறுகளில் இருந்து வரும் தண்ணீர் அளவு குறைக்கப்பட்டுள்ளது. அடையாறு நந்தம்பாக்கம் அணையில் 40,000 கன அடியில் இருந்து 37 ஆயிரம் கன அடியாக நீர்வரத்து குறைந்துள்ளது.

ஆறுகளில் வரும் தண்ணீர் உள்ளிட்டவை இயற்கையாகவே நன்றாக வடிந்து வருகிறது. மேலும், மோட்டர்கள் மூலமும் நீர் வடிவதற்கான பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. தண்ணீர் குறைகுறைய சுத்தம் செய்யும் பணிகள் நடந்து வருகின்றன. பிற மாவட்டங்களில் இருந்து வருகை புரிந்த 75,000 பேர் பணியாற்றி வருகின்றனர்.

17 மனித உயிரிழப்புகளும், 311 கால்நடை உயிரிழப்புகளும் நடந்த சோகம்: மற்ற மாவட்டங்களில் இருந்து பணியாளர்கள் வரவழைக்கப்பட்டு உள்ளனர். சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு 896 இடங்களில் தண்ணீர் தேங்கி நிற்கிறது. மின்சார வாரியம், காவல்துறை, நெடுஞ்சாலைத்துறை போன்ற அனைத்து துறை சார்ந்தவர்களும் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். தேசிய பேரிடர் மீட்புக்குழு 34 குழுக்கள் பணியில் உள்ளனர். 17 மனித உயிழிப்பு ஏற்பட்டுள்ளது. 311 கால்நடை உயிரிழப்பு பதிவாகியுள்ளது.

விரைவில் மின் விநியோகம் சீராகும்: மின்சாரம் அனைத்து பகுதிகளிலும் அளிக்கலாம் ஆனாலும் நாம் பாதுகாப்பு கருதி கொடுக்காமல் இருக்கிறோம். சென்னையில் 1900 மெகாவாட் மின்சாரம் பயன்பாடாக உள்ளது. பெரும்பாக்கம், சென்னை, எண்ணூர் உள்ளிட்ட 4 மின் நிலையங்கள் மட்டும் மின் இணைப்பு கொடுக்கப்படாமல் உள்ளது. வடசென்னையில் 2 மணிக்கு மின் இணைப்பு தரப்படும். மின்சார வாரியத்திற்கு நேற்று 3,600 புகார் வந்தது. ஆனால், இன்று 800 புகார் தான் வந்துள்ளன.

சென்னையில் 14 லட்சம் லிட்டர் பால் விநியோகம்: மின் நிலையங்களில் இருக்கக்கூடிய தண்ணீரை அப்புறப்படுத்த கூடிய பணிகள் நடைபெற்று வருகிறது. பெரும்பாக்கம் உள்ள பகுதிகளில் தண்ணீர் குறைய குறைய மின் இணைப்புகள் கொடுக்கப்பட்டு வருகிறது, இன்று மாலைக்குள் பெரிய அளவில் பாதிப்பு இல்லாத அள்வில் மின் இணைப்பு கொடுக்கப்பட்டிருக்கும். அத்தியாவசிய பொருட்களைப் பொறுத்தவரை, தினமும் சென்னையில் 14 லட்சம் லிட்டர் பால் விநியோகிக்கப்படுகிறது.

பெங்களூரில் இருந்து 50 ஆயிரம் லிட்டர் குடிநீர் விநியோகம்: இன்று ஆவின் 10 லட்சம் லிட்டர், மற்ற தனியார் பால் நிறுவனம் 4 லட்சம் லிட்டர் என் மொத்தம் 14 லட்சம் லிட்டர் பால் சப்ளை செய்யப்பட்டுள்ளது. 6,650 கிலோ பால் பவுடர் பிற மாவட்டங்களில் இருந்து சப்ளை செய்யப்பட்டுள்ளது. 50 ஆயிரம் குடிநீர் பாட்டில்கள் விநியோகம் செய்யப்பட்டுள்ளது. பெங்களூரில் இருந்து 50 ஆயிரம் பிரெட் பாக்கெட்டுகள் விநியோகம் செய்து வழங்கப்பட உள்ளது. 56 பேருந்து சாலைகளில் மட்டும்தான் தண்ணீர் தேங்கியுள்ளது. அதை உடனடியாக சரி செய்வதற்கான பணிகள் நடைபெற்று வருகின்றன.

வெள்ளப் பாதிப்புகள் விரைவில் சரிசெய்யப்படும்: 14 சுரங்கப்பாதைகளிலிருந்து மழைநீர் அகற்றப்பட்டுள்ளது. 421 இடங்களில் சின்ன சின்ன தெருக்கள் உட்பட தண்ணீர் இன்னும் வடியாமல் இருக்கிறது. நேற்று ஆயிரமாக இருந்தது இன்று 400 ஆக குறைந்துள்ளது. வெள்ளப் பாதிப்புகள் தொடர்பாக, 2537 புகார்கள் பெறப்பட்டுள்ளன. அதில் 1,694 புகார்கள் சரி செய்யப்பட்டுள்ளன. 843 புகார்கள் நிலுவையில் உள்ளன. விரைவில் சரிசெய்யப்படும்.

சென்னை திருவள்ளுர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள 900 விற்பனை நிலையங்கள் 830 பெட்ரோல் பங்க் இயங்கி வருகிறது. தொலைத்தொடர்பு 85 சதவீதம் செயல்பட்டு வருகிறது. நேற்றைவிட இன்று இயல்பு நிலை வருகின்றது. இயல்பு நிலை திரும்பி வருவதால், பொதுமக்கள் பீதி அடைய வேண்டாம். சில இடங்களில் கேன் குடிநீர் அதிக விலைக்கு விற்பனை செய்வதாக புகார் வந்துள்ளது.

அதிக விலைக்கு அத்தியாவசியப் பொருட்களை விற்றால் நடவடிக்கை: அத்தியாவசிய பொருட்களை வியாபாரிகள் அதிகப்பட்ச விற்பனை விலைக்கு மேல் விற்றால் நடவடிக்கை எடுக்கப்படும். பொதுமக்கள் தங்களின் தேவைக்கு மேல் அத்தியவசியப் பொருட்களை வாங்கி இருப்பு வைத்துக்கொள்ள வேண்டாம். சென்னையில் முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளவர்களுக்கு உணவு தயார் செய்து வழங்கப்படுகிறது.

அம்மா உணவகங்கள் மூலம் உணவு: 48 அம்மா உணவங்களில் இருந்து உணவு தயார் செய்யப்பட்டு வழங்கப்படுகிறது. நான்கு சக்கர வாகனங்கள் மற்றும் இரண்டு சக்கர வாகனங்களுக்கான பழுதுகளை சரி செய்வதற்காக சிறப்பு முகாம்கள் அமைப்பதற்கு ஏற்பாடு செய்யப்பட உள்ளது. விரைவில், இன்ஷூரன்ஸ் கம்பெனிகளுடன் இணைந்து சிறப்பு முகாம்கள் நடத்தப்பட உள்ளது. சென்னை மாநகர, புறநகர் வித்தியாசமில்லாமல் சென்னை மாநகராட்சி அண்டைய தாம்பரம், ஆவடி மாநகராட்சிகள், மாங்காடு நகராட்சி, உள்ளாட்சி அமைப்புகளுடன் ஒருங்கிணைந்து எந்த வித்தியாசமின்றி முழுமையாக பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

கடைசி தெருக்களில் தண்ணீர் வடிந்து அனைத்து பணிகளையும் முடிக்கும் வரை நாங்கள் ஓய்வெடுக்க மாட்டோம். விரைவில் சகஜ நிலை வரும். தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அமைச்சர்கள் தொடர்ந்து களத்தில் பணியில் இருந்து வருகின்றனர். எனவே பொதுமக்கள் பீதி அடையாமல் இருக்க வேண்டும் என தெரிவித்தார்.

இதையும் படிங்க: மிக்ஜாம் புயல் பாதிப்புகள்: செங்கல்பட்டு மாவட்டத்தில் எந்தெந்த தாலுகாவில் பள்ளிகள், கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை

Last Updated : Dec 6, 2023, 10:30 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.