ETV Bharat / state

தலைமைச் செயலாளர் சண்முகம் பதவிக்காலம் 3 மாதம் நீட்டிப்பு - TN chief secretary shanmugam

சென்னை: தமிழ்நாடு தலைமைச் செயலாளர் சண்முகத்தின் பதவிக்காலத்தை மேலும் மூன்று மாதங்களுக்கு நீட்டித்து அரசு உத்தரவிட்டுள்ளது.

TN chief secretary shanmugam job 3 months extension

author img

By

Published : Oct 15, 2020, 2:22 AM IST

கடந்த 2019ஆம் ஆண்டு ஜூன் 29ஆம் தேதி புதிய தலைமைச் செயலாளராக மூத்த ஐ.ஏ.எஸ். அலுவலர் சண்முகம் தமிழ்நாடு அரசால் நியமிக்கப்பட்டார். ஜூலை 1ஆம் தேதி அவர் தமிழ்நாடு அரசின் 46ஆவது தலைமைச் செயலாளராகப் பொறுப்பேற்றார்.

இவரது பதவிக்காலம் ஜூலை மாதத்துடன் நிறைவடைந்த நிலையில் கரோனா பாதிப்பு காரணமாக அக்டோபர் வரை நீட்டிக்கப்பட்டது. அதன்படி, அவரது பதவிக்காலம் இம்மாத இறுதியில் நிறைவடையவுள்ளது.

இந்நிலையில், தலைமைச் செயலாளர் சண்முகத்தின் பதவிக்காலம் நவம்பர் 1ஆம் தேதி முதல் 2021ஆம் ஆண்டு ஜனவரி 31ஆம் தேதி வரை நீட்டித்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது.

இதையும் படிங்க: 1570 கோடி ரூபாய் வருமானம் எப்படி கிடைக்கும்? துணை வேந்தருக்கு தமிழ்நாடு அரசு கடிதம்!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.