சென்னை தலைமைச் செயலகத்திலுள்ள சட்டப்பேரவை மண்டபத்தில், டாக்டர் P. சுப்பராயன், ஓ.பி.இராமசாமி ரெட்டியார், வ.உ. சிதம்பரனார் ஆகியோரது திருவுருவப் படங்கள் திறந்து வைக்கப்படும் என, முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி அறிவித்திருந்தார். அதன்படி, நாளை (பிப்.23) தலைமைச் செயலகத்தில் இவர்களுது திருவுருவப் படத்தைத் திறந்து வைக்கிறார்.
இந்நிகழ்வில் சட்டப்பேரவைத் தலைவர் தனபால், சட்டப்பேரவைத் துணைத் தலைவர் பொள்ளாச்சி ஜெயராமன், துணை முதலமைச்சர் ஓ .பன்னீர்செல்வம் உள்ளிட்டோர் பங்கேற்கின்றனர். புதிதாக மூன்று தலைவர்கள் படங்கள் திறப்பதன் மூலம் சட்டப்பேரவையில் தலைவர்களின் படங்கள் எண்ணிக்கை 15 ஆக அதிகரித்துள்ளது.
திருவள்ளுவர், மகாத்மா காந்தி, ராஜாஜி, காமராஜர், காயிதேமில்லத், அம்பேத்கர், முத்துராமலிங்கத் தேவர், பெரியார், அண்ணா, எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா, ராமசாமி படையாட்சியார் உள்ளிட்ட 12 பேரின் படங்கள், சட்டப்பேரவையில் ஏற்கனவே இடம்பெற்றிருப்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: மெட்ரோ ரயில் கட்டணம் குறைப்பு - முதலமைச்சர் அறிவிப்பு