நாட்டின் 73ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு, தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி சென்னையில் உள்ள புனித காமராஜர் சாலையில் உள்ள கோட்டை கொத்தளத்தில் முப்படைகளின் அணிவகுப்பு மரியாதையை ஏற்று மூவர்ணக் கொடியை ஏற்றிவைத்தார்.
இதைத் தொடர்ந்து, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உரையாற்றி வருகிறார். தொடர்ந்து அப்துல் கலாம் விருது, கல்பனா சாவ்லா விருது உள்ளிட்ட விருதுகளை வழங்கவுள்ளார். மேலும், பள்ளி மாணவ-மாணவிகளின் கலை நிகழச்சிகளையும் காண இருக்கிறார்.