ETV Bharat / state

மின் வாகனத்திற்கு சார்ஜ் மையங்கள் அமைக்க ஆய்வு - அண்ணா பல்கலைகழகம்!

author img

By

Published : Feb 4, 2019, 12:00 AM IST

சென்னை: பெட்ரோல் பங்குகள் போல் பேட்டரியால் இயங்கும் கார் மற்றும் இரு சக்கர வாகனத்திற்கு சார்ஜர் நிலையங்கள் அமைப்பது குறித்து அண்ணா பல்கலைகழகம் ஆய்வு மேற்கொள்ள உள்ளதாக தெரிவித்துவிக்கப்பட்டுள்ளது.

அண்ணா பல்கலைக்கழக பதிவாளர்

சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில், மத்திய அரசின் ரூசா திட்டத்தின் கீழ் ரூ.50 கோடி செலவில் வேலைவாய்ப்பு மற்றும் தொழில் முனைவோர் மேம்பாட்டு மையம் அமைக்க, ஜம்மு-காஷ்மீரில் நடைபெற்ற நிகழ்ச்சில் வீடியோ கான்பரன்சிங்கில் மூலம் பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார். இந்த திட்டத்தின் கீழ் தமிழகத்தில் அண்ணா பல்கலைக்கழகம், அழகப்பா பல்கலைக்கழகம், மதுரை காமராஜர் பல்கலைக்கழகம், பாரதிதாசன் பல்கலைகழகம், சென்னை பல்கலைக்கழகம் உள்ளிட்ட 7 பல்கலைக்கழகங்கள் நிதியுதவி பெறுகின்றன.

சென்னையில் உள்ள அண்ணா பல்கலைகழகத்தில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் பங்கேற்ற பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அண்ணா பல்கலைக்கழக பதிவாளர் குமார் கூறியதாவது, "அண்ணா பல்கலைக்கழகம், ரூசா திட்டத்தின் கீழ் முதல் கட்டமாக பல்வேறு திட்டப் பணிகளை நிறைவு செய்துள்ளது. தற்பொழுது இரண்டாம் கட்டமாக அளிக்கப்பட்டுள்ள நிதியில் ரூ.15 கோடி கணினி துறை மேம்பாட்டிற்கு பயன்படுத்த உள்ளது. மீதமுள்ள ரூ.35 கோடியில், ஆராய்ச்சிக்கு அதிக முக்கியத்துவம் அளிக்க வேண்டும் என மத்திய அரசு கூறியுள்ளது.

அடிக்கல் நாட்டு விழா
undefined

அண்ணா பல்கலைக்கழகத்தில் செயல்படும் மெக்கானிக்கல் இன்ஜினியரிங் மற்றும் எலக்ட்ரிகல் இன்ஜினியரிங் ஆகிய துறைகள் இணைந்து, பேட்டரியில் இயங்கும் இரு சக்கர வாகனங்கள், கார்களுக்கு பேட்டரி நிரப்பக்கூடிய நிலையங்களை ஏற்படுத்த ஆய்வு செய்ய திட்டமிட்டுள்ளது. இந்த ஆய்வானது இரண்டு ஆண்டுகளுக்குள் முடிக்கப்பட்டு அரசிடம் சமர்ப்பிக்கப்படும். இந்த ஆய்வினை மேற்கொள்ளும் பொழுது தேவையான ஆலோசனைகளும் பிற நிறுவனங்களிடமிருந்து பெறப்பட்டும்" என்று தெரிவித்தார்.

Intro:பெட்ரோல் பங்குகளை போல்
பேட்டரி கார் இருசக்கர வாகனத்திற்கு
சார்ஜ் மையங்கள் அமைப்பதற்கு ஆய்வு
அண்ணா பல்கலைக்கழக பதிவாளர் குமார் தகவல்

Body:சென்னை, கார் மற்றும் இருசக்கர வாகனங்களுக்கு பெட்ரோல் பங்குகள் இயங்குவது போல் பேட்டரியால் இயங்கும் கார் மற்றும் இரு சக்கர வாகனத்திற்கு சார்ஜர் நிலையங்கள் அமைப்பது குறித்து அண்ணா பல்கலைகழகம் ரூ 35 கோடி செலவில் ஆய்வு மேற்கொள்ள உள்ளது என அதன் பதிவாளர் குமார் தெரிவித்தார்.
சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் மத்திய அரசின் ரூசா திட்டத்தின் கீழ் ரூ 50 கோடி செலவில் வேலைவாய்ப்பு மற்றும் தொழில் முனைவோர் மேம்பாட்டு மையம் ஜம்மு-காஷ்மீரில் நடைபெற்ற நிகழ்ச்சியின் மூலம் பிரதமர் மோடி வீடியோ கான்பரன்சிங்கில் அடிக்கல் நாட்டினார்.
இந்த திட்டத்தின் கீழ் தமிழகத்தில் அண்ணா பல்கலைக்கழகம் ,அழகப்பா பல்கலைக்கழகம், மதுரை காமராஜர் பல்கலைக்கழகம், பாரதிதாசன் பல்கலைகழகம், சென்னை பல்கலைக்கழகம் உள்ளிட்ட 7 பல்கலைக்கழகங்கள் நிதியுதவி பெறுகின்றன.
இந்நிகழ்ச்சிக்கு பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அண்ணா பல்கலைக்கழக பதிவாளர் குமார், அண்ணா பல்கலைக்கழகம் ரூசா திட்டத்தின்கீழ் முதல் கட்டத்தில் பல்வேறு திட்டப் பணிகளை நிறைவு செய்துள்ளோம்.
தற்பொழுது இரண்டாம் கட்டத்தில் அளிக்கப்பட்டுள்ள நிதியில் ரூ 15 கோடி கம்ப்யூட்டர் துறை மேம்பாட்டிற்கு பயன்படுத்த உள்ளோம்.
மீதமுள்ள ரூ 35 கோடியில் மத்திய அரசு ஆராய்ச்சிக்கு அதிக முக்கியத்துவம் அளிக்க வேண்டும் என கூறியுள்ளது. இந்த நிதியில் மத்திய அரசு 60 சதவீதமும் ,மாநில அரசு 40 சதவீதமும் அளிக்கும்.

அண்ணா பல்கலைக்கழகத்தின் செயல்படும் மெக்கானிக்கல் இன்ஜினியரிங் ,எலக்ட்ரிகல் இன்ஜினியரிங் ஆகிய துறைகள் இணைந்து இரு சக்கர வாகனம் மற்றும் கார் ஆகியவை பேட்டரியால் இயங்கும் பொழுது தற்போது 100 கிலோமீட்டர் வரை செல்கின்றன. அதற்கு மேல் செல்லும்போது அவற்றிற்கான பேட்டரி நிரப்பக்கூடிய நிலையங்கள் ஏற்படுத்துகிறது ஆய்வு செய்ய திட்டமிட்டுள்ளோம்.
இதற்காக தேவையான வழித்தடங்கள் அமைப்பது குறித்தும் ஆய்வு செய்யப்படும் . மேலும் பேட்டரியில் சார்ஜ் செய்வது குறித்து கண்காணிப்பது குறித்தும் ஆலோசனைகள் செய்யப்படும் .இந்த ஆய்வானது இரண்டு ஆண்டுகளுக்குள் முடிக்கப்பட்டு அரசிடம் சமர்ப்பிக்கப்படும்.
மேலும் இந்த ஆய்வினை மேற்கொள்ளும் பொழுது தேவையான ஆலோசனைகளும் பிற நிறுவனங்களிடமிருந்து பெறுவோம் என தெரிவித்தார்.
இந்தப் பேட்டியின் போது திட்டமிடல் மற்றும் மேம்பாட்டுத் துறை இயக்குனர் மோகன்லால் உடன் இருந்தார்.

Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.