ETV Bharat / state

அரசு ஊழியர்களின் குழந்தைகள் அரசு பள்ளியில் சேர்ப்பது கட்டாயமாக்கப்படுமா..? செங்கோட்டையன் பதில் - Govt staff children

சென்னை: அரசு ஊழியர்கள், ஆசிரியர்களின் குழந்தைகளை அரசு பள்ளியில் சேர்க்க வேண்டும் என்பது குறித்து தமிழக அரசு ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்கும் என பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.

Minister
author img

By

Published : Feb 18, 2019, 11:55 PM IST

சென்னை கோட்டூர்புரத்தில் உள்ள அண்ணா நுாற்றாண்டு நூலக வளாகத்தில் நடைபெற்ற விழாவில் பள்ளிக்கல்வி துறை அமைச்சர் செங்கோட்டையன் கலந்து கொண்டார்.

அந்த விழாவில் கலந்துகொண்ட பிறகு செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன், “பள்ளிக் கல்வித்துறையில் பல்வேறு திட்டங்களை செயல்படுத்துவதற்கு ரூ.28,000 கோடி நிதியை தமிழக அரசு ஒதுக்கியுள்ளது. தமிழகத்திலுள்ள மாணவர்கள் கல்வி நன்றாகக் கற்பதற்காக விரைவில் கல்வித் துறைக்கென தனி தொலைக்காட்சி முதலமைச்சரின் அனுமதியைப் பெற்று துவக்கப்பட உள்ளது.

ஐந்தாம் மற்றும் எட்டாம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத் தேர்வு நடத்துவது குறித்து கல்வியாளர்கள், பொதுமக்கள் ஆகியோருடைய கருத்துகள் கேட்கப்பட்ட பின்னர், அமைச்சரவைக் கூட்டத்தில் இதுகுறித்து ஒப்புதல் பெற்று முடிவெடுக்கப்படும்.

கடந்தாண்டு 2018-ல் 1,6,9,11 ஆகிய வகுப்பு மாணவர்களுக்கு பாடத்திட்டம் மாற்றப்பட்டுள்ளது. வரும் கல்வியாண்டில் 2 ,3, 4, 5 ,7, 8 ,10, 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு பாடத்திட்டம் மாற்றப்படும். மேலும், 2,7,10, 12-ம் வகுப்பு மாணவர்களுக்கான பாடப் புத்தகங்கள் பதினைந்து நாட்களுக்குள் எழுதி முடிக்கப்படும் என தெரிவித்தார்.

அரசு ஊழியர்கள், ஆசிரியர்களின் குழந்தைகளை அரசு பள்ளிகளில் சேர்க்கும் வகையில் விதிகளில் திருத்தம் செய்யக்கூடாது என உயர்நீதிமன்ற மதுரைக் கிளை ஆலோசனை தெரிவித்திருப்பது குறித்த செய்தியாளர்களின் கேள்விக்கு பதிலளித்த அவர், நீதிமன்ற உத்தரவு முழுமையாகக் கிடைத்தபிறகு, அதுகுறித்து அரசு பரிசீலனை செய்யும் என்றார்.

சிறப்பு ஆசிரியர்கள் நியமனத்தை பொருத்தவரை, மதுரை ஆசிரியர்கள் ஐந்து நாட்களுக்குள் நியமிக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும். ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்ற ஆசிரியர்கள் அரசு பணிக்கு வருவதற்கு மீண்டும் ஒரு தேர்வு எழுத வேண்டி உள்ளது.

அதற்குக் காரணம் அவர்கள் 2012, 2013-ம் ஆண்டுகளில் ஆசிரியர் தகுதித் தேர்வு எழுதி தேர்ச்சி பெற்றுள்ளனர். மீண்டும் ஒரு போட்டி தேர்வு வைப்பது நல்லதாகவே கருதுகிறோம். இந்தத் தேர்வானது வரவேற்கத்தக்கதாக உள்ளது” என அவர் தெரிவித்தார்.

undefined

Intro:அரசு ஊழியர்கள் ஆசிரியர்கள் குழந்தைகள்
அரசு பள்ளியில் சேர்க்க நடவடிக்கையா?
பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் பதில்

Body:சென்னை,
அரசு ஊழியர்கள் ஆசிரியர்கள் குழந்தைகளை அரசு பணியில் சேர்க்க வேண்டும் என்பது குறித்து தமிழக அரசு ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்கும் என பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்தார்.
சென்னை கோட்டூர்புரத்தில் உள்ள அண்ணா நூற்றாண்டு நூலக வளாகத்தில் உதவி தொடக்கக் கல்வி அலுவலர்கள் வட்டார கல்வி அலுவலர் பதவியின் பெயர் மாற்றியதாகவும், நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் பணியிலிருந்து வட்டார கல்வி அலுவலர் பதவியினை உயர்த்தி வழங்கியதற்காக பள்ளி கல்வித்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையனுக்கு அந்த சங்கத்தின் சார்பில் இன்று பாராட்டு விழா நடத்தப்பட்டது.
அதன் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன், பள்ளிக் கல்வித் துறையின் பல்வேறு திட்டங்களை செயல்படுத்துவதற்கு 28,000 கோடி ரூபாய் நிதியை தமிழக அரசு ஒதுக்கியுள்ளது. தமிழகத்திலுள்ள மாணவர்கள் கல்வி நன்றாக கற்பதற்காக விரைவில் கல்வித் துறைக்கென தனி சேனல் ஒன்று முதல்வரின் அனுமதியைப் பெற்று துவக்கப்பட உள்ளது.
5 மற்றும் 8ஆம் வகுப்பு மாணவர்களுக்கான பொது தேர்வு நடத்துவது குறித்து கல்வியாளர்கள் பொது மக்கள் ஆகியோரின் கருத்துகள் கேட்கப்பட்ட பின்னர் அமைச்சரவை கூட்டத்தில் ஒப்புதல் பெற்று முடிவெடுக்கப்படும்.
கடந்தாண்டு 1 6 9 11 வகுப்பு மாணவர்களுக்கு பாடத்திட்டம் மாற்றப்பட்டுள்ளது. வரும் கல்வியாண்டில் 2 ,3, 4, 5 ,7, 8 ,10, 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு பாடத்திட்டம் மாற்றப்படும். 2 7 10 பன்னிரண்டாம் வகுப்பு மாணவர்களுக்கான பாடப் புத்தகங்கள் 15 நாட்களுக்குள் எழுதி முடிக்கப்படும் எனக் கூறினார்.
மேலும் அரசு ஊழியர்கள் ஆசிரியர்களின் குழந்தைகளை அரசு பள்ளிகளில் சேர்க்கும் வகையில் விதிகளில் திருத்தம் செய்யக்கூடாது என உயர்நீதிமன்ற மதுரை கிளை ஆலோசனை தெரிவித்திருப்பது குறித்து கேட்டதற்கு, நீதிமன்ற உத்தரவுகள் முழுமையாகக் கிடைத்த பிறகு அது குறித்து அரசு பரிசீலனை செய்யும் என்றார்.
சிறப்பு ஆசிரியர்கள் நியமனத்தை பொருத்தவரை மதுரை உயர்நீதிமன்றத்தில் உத்தரவு கிடைக்கப்பெற்றுள்ளது. அது குறித்த மற்றொரு வழக்கு சென்னை உயர் நீதிமன்றத்தில் உள்ளது அந்த வழக்கின் மீதான தீர்ப்பு வந்தவுடன் சிறப்பு ஆசிரியர்கள் ஐந்து நாட்களுக்குள் நியமிக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.
ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்ற ஆசிரியர்கள் அரசு பணிக்கு வருவதற்கு மீண்டும் ஒரு தேர்வு எழுத வேண்டி உள்ளது. காரணம் அவர்கள் 2012, 20 13 ஆண்டுகளில் டெட் தேர்வு எழுதி தேர்ச்சி பெற்றுள்ளனர். மீண்டும் ஒரு போட்டி தேர்வு வைப்பது நல்லதாகவே கருதுகிறோம். இந்தத் தேர்வானது வரவேற்கத்தக்கதாக உள்ளது என கூறினார்.

Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.