முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் அமைச்சரவைக் கூட்டம் இன்று மாலை 5 மணிக்கு தொடங்கியது. கரோனா சிகிச்சைக் காரணமாக அமைச்சர்கள் கே.பி.அன்பழகன், தங்கமணி, செல்லூர் ராஜூ கூட்டத்தில் பங்கேற்கவில்லை.
புதிய தொழில்கள், அவசர சட்டங்கள், கரோனா தடுப்பு நடவடிக்கைகள், ஊரடங்கு தளர்வுகள் குறித்து கூட்டத்தில் முடிவெடுக்கப்படும் என தகவல் வெளியாகியுள்ளது.
மேலும் ஜூலை 13ஆம் தேதி சில வெளிநாட்டு நிறுவனங்களுக்கு தமிழ்நாட்டில் தொழில்தொடங்க முதலமைச்சர் அழைப்பு விடுத்துள்ள நிலையில் அதற்கான ஒப்புதல் குறித்து முடிவெடுக்கப்படும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.
இதையும் படிங்க: முன்னணி லாஜிஸ்டிக்ஸ், பெட்ரோ கெமிக்கல் நிறுவனங்களுக்கு முதலமைச்சர் அழைப்பு!