ETV Bharat / state

தமிழ்நாடு பட்ஜெட் 2020 - 21 - நெடுஞ்சாலைத்துறை மற்றும் சிறு துறைமுகங்களுக்கான ஒதுக்கீடு - பட்ஜெட்

சென்னை: தமிழ்நாடு பட்ஜெட் 2020 - 21இல் நெடுஞ்சாலைத்துறை மற்றும் சிறு துறைமுகங்களுக்கான ஒதுக்கீடு குறித்த தகவல்கள்.

TN Budget 2020: road and transport allocation

author img

By

Published : Feb 14, 2020, 12:44 PM IST

நெடுஞ்சாலைத் துறை பாதுகாப்புக்காக தனியாக ஒரு துறை உருவாக்கப்படும். நெடுஞ்சாலைத்துறைக்கு ரூ. 15,850 கோடி ஒதுக்கீடு.

சென்னை, மதுரை, கோவை மாநகராட்சிகளில் சாலை பாதுகாப்பு பிரிவுகள் ஏற்படுத்தப்படும். சென்னை சுற்றுவட்டச்சாலை திட்டங்களுக்கு ரூ. 12301 கோடி ஒதுக்கீடு.

ஒருங்கிணைந்த சாலை கட்டமைப்பு திட்டங்களுக்கு ரூ 5,500 கோடி.

சாலை பாதுகாப்பு திட்டங்களுக்காக ரூ.1,403 கோடி ஒதுக்கீடு. தமிழ்நாடு சாலை மேம்பாட்டு திட்டத்தின் 2ஆவது திட்டப் பணிகளுக்கு ரூ. 615.54 கோடி.

போக்குவரத்து துறைக்கு ரூ. 2,716 கோடி நிதி ஒதுக்கீடு. அரசுப் பேருந்துகளில் மின்னணு பணப்பரிமாற்ற முறையில் பயணச் சீட்டு வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்.

போக்குவரத்து மானியன்களுக்காக ரூ. 110 கோடி ஒதுக்கீடு.

அனைத்து அரசுப் பேருந்துகளிலும் சிசிடிவி. நிர்பயா திட்டத்தின் கீழ் தமிழகத்தில் அனைத்து அரசுப் பேருந்துகளிலும் கண்காணிப்பு கேமரா பொருத்தப்படும்.

பெண்கள் பாதுகாப்புக்கான நிர்பயா திட்டத்துக்கு தமிழ்நாடு பட்ஜெட்டில் ரூ.71 கோடி ஒதுக்கீடு.

ஆழ்கடலில் மீன்பிடிக்க செல்லும் தமிழ்நாடு மீனவர்களை தொடர்புகொள்வதற்கு இஸ்ரோவின் டிரான்ஸ்பாண்டர்கள் படகுகளில் பொருத்தப்படும்.

4,997 விசைப்படகுகளுக்கு ரூ. 18 கோடி ஒதுக்கீட்டில் தகவல் தொடர்பு டிரான்ஸ்பான்டர்கள் பொருத்தப்படும் என நிதியமைச்சர் ஓபிஎஸ் அறிவித்துள்ளார்.

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.