தஞ்சாவூர் : தமிழ்நாட்டின் நீர் ஆதாரத்தை பாதிக்கும் வகையில் காவிரியின் குறுக்கே மேகதாதுவில் அணை கட்ட முயற்சிக்கும் கர்நாடக அரசு கண்டித்து தமிழ்நாடு பாஜக சார்பில் ம் தஞ்சை ஜூபிடர் தியேட்டர் - பனகல் பில்டிங் அருகே உண்ணாவிரத போராட்ட நடைபெற்று வருகிறது.
அப்போது மத்திய அரசு கொண்டு வந்துள்ள காவிரி - கோதாவரி இணைப்புத் திட்டத்திற்கு ஒத்துழைப்பு அளித்து விரைந்து நிறைவேற்ற வேண்டும், காவிரி குண்டாறு இணைப்புத் திட்டத்தை விரைந்து முடிக்க தமிழ்நாடு அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.
பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தலைமையில் நடைபெறும் போராட்டத்தில், மாநில இணை பொறுப்பாளர் சுதாகர் ரெட்டி, முன்னாள் அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன், முன்னாள் மாநில தலைவர் சிபி ராதாகிருஷ்ணன், முன்னாள் தேசிய செயலாளர் ஹெச் ராஜா உள்ளிட்ட பலர் பங்கேற்றுள்ளனர்.
இதையும் படிங்க: இல்லத்தரசிகளுக்கு ரூ.1000: ஆகஸ்ட் 15இல் அறிவிக்கிறார் ஸ்டாலின்?