சென்னை : முதலமைச்சர் மு.க ஸ்டாலின் மற்றும் முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி மற்றும் மருத்துவர் ஷர்மிளா ஆகியோரை சமூக வலைத்தளங்களில் அவதூறாக கருத்து தெரிவித்த புகாரின் அடிப்படையில் பாஜக பிரமுகர் கல்யாணராமன் சென்னையில் நள்ளிரவில் கைது செய்யப்பட்டுள்ளார்.
பாஜக பிரமுகரான கல்யாணராமன் நேற்று முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் மற்றும் முன்னாள் முதலமைச்சர் மு. கருணாநிதி ஆகியோரை சர்ச்சைக்குரிய வகையில் சமூக வலைத்தளத்தில் பதிவிட்டிருந்தார். மேலும் திரைப்பட நடிகையும் மருத்துவருமான சர்மிளாவை ஆபாசமாக பேசி இருந்தார்.
இந்த நிலையில் கல்யாணராமன் உடனடியாக கைது செய்ய வேண்டும் என சந்தோஷ் என்பவர் சென்னை சைபர் கிரைம் போலீசாரிடம் புகார் அளித்தார். இந்தப் புகாரின் அடிப்படையில் போலீசார் வழக்குப்பதிவு செய்து வளசரவாக்கம் தேவி குப்பம் பகுதியில் இருந்த கல்யாணராமனை மத்திய குற்றப்பிரிவு போலீசார் நள்ளிரவில் கைது செய்தனர்.
கல்யாணராமன் இடம் தொடர்ந்து மத்திய குற்றப்பிரிவு போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கல்யாணராமன் ஏற்கனவே நபிகள் நாயகம் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசி கைதானது குறிப்பிடத்தக்கது. கைது செய்யப்பட்ட பாஜக பிரமுகர் கல்யாணராமன் மீது, IPC 153(a) , 505(2) இரண்டு பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
இதையும் படிங்க : பாஜக பிரமுகர் கல்யாணராமன் மீது நடவடிக்கை எடுக்க இஸ்லாமியர்கள் கோரிக்கை