ETV Bharat / state

'செய்யூரில் பழுதடைந்த மின்மாற்றியை மாற்ற நடவடிக்கை எடுக்கப்படும்' - மின்சாரத்துறை அமைச்சர் தங்கமணி

சென்னை: செய்யூர், சித்தாமூர், சித்தர்காடு ஆகிய பகுதிகளில் பழுதடைந்த மின்மாற்றிகளை மாற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என மின்சாரத் துறை அமைச்சர் தங்கமணி சட்டப்பேரவையில் தெரிவித்துள்ளார்.

thangamani
thangamani
author img

By

Published : Feb 20, 2020, 2:01 PM IST

சட்டப்பேரவையில் இன்று கேள்வி நேரத்தின்போது செய்யூர் சட்டப்பேரவை உறுப்பினர் ஆர்.டி. அரசு, செய்யூர், சித்தாமூர் ஒன்றியம், சித்தர்காடு ஆகிய கிராமங்களுக்குப் புதிய மின்மாற்றி அமைக்க அரசு முன்வருமா என்று கேள்வியெழுப்பினார். இதற்குப் பதிலளித்துப் பேசிய மின்சாரத் துறை அமைச்சர் தங்கமணி, ”ஏற்கனவே இருக்கின்ற மின்மாற்றி போதுமான அளவிற்கு இருக்கிறது.

50 விழுக்காடு மின்சாரம் மட்டுமே பயன்படுத்தப்பட்டுவருகிறது. எனவே, புதிதாக மின்மாற்றி அமைக்க வேண்டிய அவசியம் இல்லை. சட்டப்பேரவை உறுப்பினர் மின் அழுத்தம் இருக்கிறது என கூறியுள்ளதால், அது குறித்து ஆய்வு செய்யப்படும்.

561 மின் இணைப்புகள் அந்தப் பகுதியில் மட்டுமே உள்ளன. மின் கம்பிகள் பழுதாகி உள்ளன. இதனை மாற்றம் செய்ய நடவடிக்கை எடுக்கப்படும்" என்றார்.

இதையும் படிங்க: ரவீந்திரநாத்குமார் வெற்றி குறித்த வழக்கு: எதிர் மனுதாரர் பதிலளிக்க நீதிமன்றம் உத்தரவு

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.