கரோனா தொற்று காரணமாக மறைந்த அனைவருக்குமே அரசு சார்பில் நிவாரணத்தொகை வழங்குவது என்பது சாத்தியம் இல்லாதது என மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியம் தெரிவித்துள்ளார்.
16ஆவது சட்டப்பேரவையின் முதல் கூட்டத்தொடர்: இரண்டாவது நாளில் நடைபெற்ற முக்கிய நிகழ்வுகள் - 16ஆவது சட்டப்பேரவையின் முதல் கூட்டத்தொடர்: இரண்டாவது நாள்
14:16 June 22
அரசு சார்பில் நிவாரணத்தொகை வழங்குவது என்பது சாத்தியம் இல்லாதது - மா.சுப்பிரமணியம்
12:41 June 22
சிஏஏ-வை திரும்பப்பெற தீர்மானம் நிறைவேற்றப்படும் - ஸ்டாலின் அறிவிப்பு
ஒன்றிய அரசின் குடியுரிமை திருத்தச் சட்டங்களை திரும்பப் பெற வலியுறுத்தி, பட்ஜெட் கூட்டத்தொடரின்போது சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றப்படும் என முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் ஆளுநர் மீதான விவாதத்தில் தெரிவித்துள்ளார்.
12:12 June 22
தமிழ்நாடு அரசை பாராட்டிய காங்கிரஸ் எம்.எல்.ஏ. விஜயதரணி
கரோனா சூழ்நிலையில் மத்திய அரசு அனைத்துக்கட்சி கூட்டத்தை இதுவரைக்கும் கூட்டவில்லை. ஆனால், தமிழ்நாடு அரசு அனைத்து மாநிலங்களுக்கும் வழிகாட்டியாய் அனைத்துக்கட்சி கூட்டத்தைக் கூட்டி நடவடிக்கைகள் மேற்கொண்டது வரவேற்கத்தக்கது - காங்கிரஸ் எம்.எல்.ஏ விஜயதரணி
12:10 June 22
கருணாநிதியின் உருவப்படத்தைத் திறக்க கோரிக்கை
சட்டப்பேரவையில் கலைஞர் கருணாநிதியின் திருவுருவப் படத்தைத் திறந்து வைக்க திமுக எம்.எல்.ஏ சு.சுந்தர் கோரிக்கை எழுப்பியுள்ளார்
12:04 June 22
அதிமுக ஆக்கப்பூர்வமான கட்சியாக செயல்படும் - விஜயபாஸ்கர்
இதையடுத்து விராலிமலைத் தொகுதி அதிமுக சட்டப்பேரவை உறுப்பினர் விஜயபாஸ்கர் உரையாற்றினார். அப்போது பேசிய அவர், ' அதிமுக எதிரி கட்சியாக இல்லாமல் நல்ல பல திட்டங்கள் பெற ஆக்கப்பூர்வமான எதிர்க்கட்சியாக செயல்படும். கரோனா நோய்த்தொற்று இல்லாத ஒரு நாடாக நம் நாடு இருக்க உழைத்துக் கொண்டிருக்கிறோம்
2019 டிசம்பரில் என்ன வைரஸ் என்றே தெரியாத ஒரு சூழலில் தமிழ்நாட்டில் மருத்துவத் துறையில் வலுவான ஒரு கட்டமைப்பை அதிமுக அரசு உருவாக்கியது.
கரோனா கட்டுப்பாட்டில் தற்போது நேற்று முதல் சில தளர்வுகள் வழங்கப்பட்டுள்ளது. ஆனால், நாம் இன்னும் கவனமாக இருக்க வேண்டிய தேவை இருக்கிறது.
கோவிட்-க்கு பிறகான கரோனா மறுவாழ்வு மையங்களை உருவாக்க வேண்டும் என அரசுக்கு கோரிக்கை வைக்கிறேன். மூன்றாவது அலை வருமா வராதா என மக்கள் அச்சத்தில் இருக்கின்றனர்.
எனவே, சுகாதார கட்டமைப்பை மேலும் வலுப்படுத்தி மூன்றாவது அலையை எதிர்கொள்ள நாம் தயாராக இருக்க வேண்டும்.
குறிப்பாக 18 வயதிற்குக் கீழ் உள்ளவர்களுக்கு இதுவரை தடுப்பூசி போடவில்லை.
குழந்தைகள் நல மருத்துவமனைகளில் குறைந்தபட்சம் 1 லட்சம் படுக்கைகளைத் தயார் நிலையில் வைத்துக் கொள்ள வேண்டும்
தடுப்பூசி போடுவதை மக்கள் இயக்கமாக மாற்ற வேண்டும்.
தடுப்பூசி போட 6 கோடி பேர் இலக்கு நிர்ணயித்து இதுவரை ஒரு கோடி பேருக்கு மட்டுமே முதல் தவணை தடுப்பூசி போடப்பட்டுள்ளது. இரண்டு தவணைகள் தடுப்பூசி எடுத்துக்கொண்டவர்கள் 24 லட்சம் பேர் மட்டுமே. எனவே தடுப்பூசி போடும் திட்டத்தைத் துரிதப்படுத்த வேண்டும்
முகக் கவசம் அணிவதில் இன்னும் விழிப்புணர்வு இல்லாத நிலையை மக்களிடையே நாம் பார்க்க முடிகிறது. எனவே, தடுப்பூசி போடுவதில் கவனம் செலுத்த வேண்டிய தேவை இருக்கிறது.
நீட் எதிர்ப்புக் கொள்கையில் அதிமுக அரசு உறுதியாக இருக்கிறது. உச்ச நீதிமன்ற தீர்ப்பின் அடிப்படையில் தான் நீட் தேர்வு கடந்த ஆண்டில் நடைபெற்றது. இந்த ஆண்டு நீட் தேர்வு தமிழகத்தில் இருக்கிறதா, இல்லையா என்பதை தெளிவுபடுத்த வேண்டுகிறேன்.
நீட் தேர்வில் வெற்றி பெற்றவர்களில் 7.5% அரசுப் பள்ளி மாணவர்களுக்கு இட ஒதுக்கீடு வழங்கப்பட்டது. இந்த இட ஒதுக்கீட்டில் தற்போதைய அரசின் நிலை என்ன?' என கேள்வி எழுப்பினார்.
10:34 June 22
ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் வாசிப்பு
ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தை சட்டப்பேரவை உறுப்பினர் உதய சூரியன் வாசித்தார்.
10:29 June 22
பேரவையின் மாற்றுத்தலைவர்கள் அறிமுகம்
பேரவையின் மாற்றுத்தலைவராக அன்பழகன், ராமகிருஷ்ணன், உதயசூரியன், எஸ்.ஆர்.ராஜா, டி.ஆர்.பி.ராஜா, துரை சந்திரசேகரன் ஆகியோரைப் பேரவையின் மாற்றுத்தலைவர்களாக அறிவித்தார், சபாநாயகர் அப்பாவு
10:25 June 22
ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதம் தொடக்கம்
ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதம் தொடங்கியது.
'நடிகர் விவேக் மறைவு திரையுலகிற்கும் பேரவைக்கும் பெரிய இழப்பு; அவர் மரம் நடுதல் உள்ளிட்ட சமூகப் பணிகளில் ஈடுபட்டவர்;
'சின்னக் கலைவாணர்' என்றழைக்கக்கூடியவர் என சபாநாயகர் அப்பாவு புகழாரம் சூட்டியுள்ளார்.
10:21 June 22
இரங்கல் குறிப்பு தீர்மானம் நிறைவேற்றம்
முதல் நிகழ்வாக திரைப்பட நடிகரும் சமூக ஆர்வலருமான மறைந்த நடிகர் விவேக், கல்வியாளர் துளசி வாண்டையார், எழுத்தாளர் ஆதி நாராயணன் உள்ளிட்ட 11 பேர் மறைவு குறித்து இரங்கல் குறிப்பு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
09:56 June 22
தமிழ்நாடு 16ஆவது சட்டப்பேரவையின் முதல் கூட்டத்தொடர், கரோனா பரவல் காரணமாக, ஓமந்தூரார் தோட்டத்தில் அமைந்திருக்கும் கலைவாணர் அரங்கில் நேற்று தொடங்கியது. அதைத்தொடர்ந்து இரண்டாவது நாள் கூட்டத்தொடர் சரியாக இன்று காலை 10 மணிக்குத் தொடங்கியது.