டேங்க் கிளினர் மீன் வளர்த்தால் கடுமையான நடவடிக்கை - ஜெயக்குமார்
மீன்வளத் துறையின் மானியக் கோரிக்கையின் மீது நடந்த விவாதத்தின்போது எதிர்க்கட்சித் துணைத் தலைவர் துரைமுருகன் கேள்வி எழுப்பினார். அதில், “கிராமங்களில் குளம், குட்டைகளில் டேங்க் கிளினர் மீன் வளர்க்கப்படுகிறது. அது மற்ற மீன்களைச் சாப்பிட்டுவிடுகிறது” எனத் தெரிவித்தார்
இதற்குப் பதிலளித்து பேசிய அத்துறை அமைச்சர் ஜெயக்குமார், “அந்த மீன் மற்ற மீன்களை மட்டும் சாப்பிடுவது இல்லை. கண்ட பொருள்களை சாப்பிடுகின்றன். அந்த மீன்கள் வளர்க்கத் தடைவிதிக்கப்பட்டுள்ளது. தடைசெய்யப்பட்ட மீன்களை வளர்த்தால் கடுமையான தண்டனை வழங்கப்படும்” எனத் தெரிவித்தார்.