சென்னை: தமிழ்நாடு சட்டப்பேரவையில் மாற்றுத் திறனாளிகள் நலத்துறை, வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித்துறை, சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை ஆகிய துறைகளின் மானிய கோரிக்கைகள் மீதான விவாதம் இன்று (செப். 1) நடைபெறுகிறது.
அதில் மாற்றுத்திறனாளிகள் கொள்கை விளக்க குறிப்பில், அரசுத்துறை நிறுவனங்கள், அரசுப் பள்ளிகள் ஆகியவற்றில் மாற்றுத்திறனாளிகளுக்கு 4 % இட ஒதுக்கீடு 2016 ஆம் ஆண்டு மாற்றுத்திறனாளிகள் உரிமைகள் சட்ட பிரிவு 34 இன் படி வழங்கப்பட்டு வருகிறது. மாற்றுத்திறனாளிகள் பணியாற்ற தகுதி வாய்ந்த பணியிடங்கள் கண்டறியப்பட்டு இந்த இட ஒதுக்கீடு வழங்கப்பட வேண்டும் எனவும் சட்டம் வரையறுக்கிறது.
அதனடிப்படையில் அரசு துறைகளில் உள்ள சி மற்றும் டி பிரிவு பணியிடங்கள் அனைத்தும் மாற்றுத்திறனாளிகளுக்கு உகந்தது என கண்டறியப்பட்டுள்ளதோடு, ஏ மற்றும் பி பிரிவு பணியிடங்களில் இதுவரை மொத்தம் 559 பணியிடங்கள் மாற்றுத் திறனாளிகளுக்கென கண்டறியப்பட்டு உள்ளன. இந்தப் பணியிடங்களை நிரப்ப தேவையான அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: இரண்டு மாடிக்கு மேல் கட்டிடம் - லிஃப்ட் கட்டாயம்