அவைத்தலைவர் தனபால் கடந்த மார்ச் 9ஆம் தேதி நடந்த சட்டப்பேரவையில், மறைந்த சட்டப்பேரவை உறுப்பினர்களுக்கு இரங்கல் தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றினார்.
இதையடுத்து இன்று கூடும் தமிழ்நாடு சட்டப்பேரவையில் வனம், சுற்றுச்சூழல் துறை மானியக் கோரிக்கை மீதான விவாதங்கள் நடைபெறவுள்ளன. பேரவை இன்று காலை 10 மணிக்குத் தொடங்கியதும் முதலில் கேள்வி நேரம் நடைபெறுகிறது.
அதன்பின் நேரமில்லாத நேரத்தில் பல முக்கியப் பிரச்னைகளை எதிர்க்கட்சிகள் கிளப்பும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதைத் தொடர்ந்து, வனம், சுற்றுச்சூழல் துறைகளின் மானியக் கோரிக்கை தாக்கல்செய்யப்படவுள்ளன.
இதன் மீது எதிர்க்கட்சி உறுப்பினர்கள் விவாதங்கள் நடத்திய பின்னர் துறை அமைச்சர்கள் திண்டுக்கல் சீனிவாசன், கே.சி. கருப்பணன் ஆகியோர் பதிலளித்து புதிய அறிவிப்புகளை வெளியிடவுள்ளனர். நாளை (மார்ச் 12) பள்ளி, உயர் கல்வித் துறை, இளைஞர் நலன் துறைகள் மீதான மானியக் கோரிக்கை விவாதம் நடைபெறவுள்ளது. இதற்கு துறை ரீதியான அமைச்சர்கள் பதிலளிப்பர்.
இதையும் படிங்க: மறைந்த உறுப்பினர்களுக்கு சட்டப்பேரவையில் இரங்கல்