ETV Bharat / state

பொறியியல் படிப்பில் 44 ஆயிரத்து 84 காலியிடங்கள் - மாணவர் சேர்க்கை குழு அறிவிப்பு..! - சென்னை செய்திகள்

TN Engineering Admission committee announcement: பி.இ மற்றும் பி.டெக் (B.E & B.Tech) பொறியியல் படிப்பில், 44 ஆயிரத்து 84 இடங்கள் காலியாக உள்ளது என தமிழ்நாடு பொறியியல் மாணவர் சேர்க்கை குழு அறிவித்துள்ளது.

பொறியியல் படிப்பில் 44 ஆயிரத்து 84 இடங்கள் காலியாக உள்ளதாக  மாணவர் சேர்க்கை குழு அறிவிப்பு

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Sep 9, 2023, 2:51 PM IST

சென்னை: பி.இ மற்றும் பி.டெக் (B.E & B.Tech) பொறியியல் படிப்பில் மாணவர்கள் சேர்க்கைக்கான துணை கலந்தாய்விற்கு 53 ஆயிரத்து 311 இடங்கள் அனுமதிக்கப்பட்டன. அதைத் தொடர்ந்து, இந்த இடங்களில் சேர்வதற்கு 9,247 மாணவர்களுக்கு இறுதி ஒதுக்கீட்டானது வழங்கப்பட்டு உள்ளது.

இந்நிலையில் பொறியியல் படிப்பில் சேராமல் 44 ஆயிரத்து 84 இடங்கள், ஒற்றைச் சார்ந்த முறையில் காலியாக உள்ளது என தமிழ்நாடு பொறியியல் மாணவர் சேர்க்கை குழு அறிவித்துள்ளது. பொறியியல் படிப்பில் கடந்த ஆண்டை விட நடப்பாண்டில் அரசு பள்ளி மாணவர்களுக்கான இடங்கள் அதிக அளவில் நிரப்பப்பட்டு உள்ளன.

அதேபோல பொதுப் பிரிவிலும் மாணவர்கள் அதிக அளவில் இடங்களை தேர்வு செய்துள்ளனர். வழக்கம் போல் பத்துக்கும் மேற்பட்ட கல்லூரிகளில் ஒற்றை இலக்கத்தில் மாணவர்கள் சேர்ந்துள்ளனர். மேலும் பொறியியல் படிப்பில், ஆறு கல்லூரியில் ஒரு மாணவர்கள் கூட நடப்பாண்டிலும் சேராத அவல நிலை உள்ளது. தொடர்ந்து, 27 கல்லூரிகளில் 10 சதவீதத்திற்கும் கீழ் மாணவர்கள் சேர்ந்துள்ளனர். 24 கல்லூரியில் 100 சதவீதம் மாணவர்கள் சேர்க்கை நடைபெற்றுள்ளது.

மேலும், பி.இ, பி.டெக் பட்டப்படிப்பில் மாணவர்கள் சேர்வதற்கான துணைக் கலந்தாய்விற்கான இறுதி ஒதுக்கீட்டு உத்தரவு www.tneaonline.org என்ற இணையதளத்தில் வெளியிடப்பட்டு உள்ளது. தமிழ்நாட்டில் உள்ள பொறியியல் கல்லூரிகளில் பி.இ,பி.டெக் படிப்பில் சேர விண்ணப்பம் பெற்று, தரவரிசைப் பட்டியல் 1 லட்சத்து 76 ஆயிரத்து 744 மாணவர்களுக்கு ஜூன் 22ம் தேதி வெளியிடப்பட்டது.

அந்த வகையில் இந்த ஆண்டு பொறியியல் கலந்தாய்விற்கு இதுவரையில் 442 கல்லூரிகளில் உள்ள 2 லட்சத்து 19 ஆயிரத்து 346 இடங்களில் ஒற்றைச் சாளர முறையில் 1 லட்சத்து 60 ஆயிரத்து 783 கலந்தாய்வின் மூலம் நிரப்பப்பட அனுமதிக்கப்பட்டன. மேலும், சிறப்பு பிரிவினருக்கான விளையாட்டு பிரிவில் 385 மாணவர்களுக்கும், மாற்றுத் திறனாளிகள் பிரிவில் 163 மாணவர்களுக்கும், முன்னாள் ராணுவத்தினர் பிரிவில் 137 மாணவர்களுக்கும் இடங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டு சேர்க்கை நடைபெற்றது.

அதில் பொது பிரிவு கலந்தாய்விற்கு 1 லட்சத்து 48 ஆயிரத்து 721 இடங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டன. 3 சுற்றுக் கலந்தாய்வில் 95 ஆயிரத்து 46 மாணவர்களுக்கு இடம் ஒதுக்கீடு செய்யப்பட்டது. அதில் 80 ஆயிரத்து 951 மாணவர்கள் கல்லூரியில் சேர்ந்தனர். தொடர்ந்து, அரசுப் பள்ளி மாணவர்களுக்கான 7.5 சதவீத இட ஒதுக்கீட்டில் 12 ஆயிரத்து 59 இடங்கள் அனுமதிக்கப்பட்டது. அவற்றில் 3 சுற்றுக் கலந்தாய்வு முடிவடைந்த நிலையில், 11 ஆயிரத்து 58 மாணவர்களுக்கு இடம் ஒதுக்கீடு செய்யப்பட்டத்தில், 8 ஆயிரத்து 475 பேர் கல்லூரியில் சேர்ந்துள்ளனர்.

இந்த நிலையில், தமிழ்நாடு பொறியியல் மாணவர் சேர்க்கைக்குழு துணைக் கலந்தாய்வின் மூலம் மாணவர்களை சேர்ப்பதற்கு, 12ம் வகுப்பில் தேர்ச்சிப் பெற்ற தமிழ்நாட்டை சேர்ந்த மாணவர்கள் பொது, தொழிற்கல்விப் பிரிவில் துணைத்தேர்வில் தகுதிப்பெற்றவர்கள் மற்றும் ஏற்கனவே விண்ணப்பம் செய்யாத மாணவர்களும் ஆகஸ்ட் 28ம் தேதி முதல் செப்டம்பர் 3ம் தேதி வரையில் www.tneaonline.org என்ற இணையதளத்தின் மூலம் விண்ணப்பங்களை பெற்றனர்.

இந்நிலையில், துணை கலந்தாய்வில் சேர்வதற்கு பொதுப்பிரிவிற்கு 13 ஆயிரத்து 650 மாணவர்கள் விண்ணப்பம் செய்துள்ளனர். அவர்களில் கல்வியியல் பிரிவில் 13 ஆயிரத்து 375 மாணவர்களும், தொழிற்கல்வி பிரிவில் 275 மாணவர்களும் விண்ணப்பித்து உள்ளனர். இவர்களில் தகுதி பெற்ற 13 ஆயிரத்து 244 மாணவர்கள் கலந்தாய்வில் கலந்து கொள்ள அனுமதிக்கப்பட்டு உள்ளனர்.

இதில் பொறியியல் படிப்பில் சேர்தவதற்கான தரவரிசைப் பட்டியலில் 200க்கு 199.5 மதிப்பெண் பெற்ற மாணவி வேதலட்சுமி முதலிடத்ததையும், 199 மதிப்பெண் பெற்று ராம் பிரசாத் 2ம் இடத்தையும், 198.5 மதிப்பெண் பெற்று துருவன் என்பவர் 3ம் இடத்தையும் பெற்றனர். மேலும், தொழிற்கல்விப் பிரிவில் 176.5 மதிப்பெண் பெற்று முகமது தோபிக் முதலிடத்தையும், மணிகண்டன் 165.5 மதிப்பெண் பெற்று 2ம் இடத்தையும், 165 மதிப்பெண் பெற்று முனிஸ்வரன் என்பவர் 3ம் இடத்தையும் பெற்றனர்.

அதேபோல் அரசு பள்ளி மாணவர்களுக்கான 7.5 சதவீத இட ஒதுக்கீட்டின் கீழ் சேர்வதற்கு, கல்வியியல் பிரிவில் 4 ஆயிரத்து 506 மாணவர்களும், தொழிற்கல்வி பயின்ற 79 மாணவர்கள் உட்பட 4 ஆயிரத்து 585 பேர் விண்ணப்பம் செய்தனர். அவர்களில் 4 ஆயிரத்து 466 மாணவர்கள் கலந்தாய்விற்கு தகுதி பெற்றுள்ளனர்.

அதில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கான தரவரிசைப் பட்டியலில் பிரியதர்ஷ்னி 188.5 மதிப்பெண் பெற்று முதலிடத்தையும், ராஜஸ்ரீ, இந்துமதி 187 மதிப்பெண் பெற்று 2ம் இடத்தையும், கலைவாணி 185 மதிப்பெண் பெற்று 3ம் இடத்தையும் பெற்றனர்.

அதனைத் தொடர்ந்து செப்டம்பர் 6 மற்றும் 7ம் தேதிகளில் விரும்பும் கல்லூரி மற்றும் பாடப்பிரிவினை பதிவு செய்யலால் எனக் கூறப்பட்ட நிலையில், நேற்று 8ம் தேதி தற்காலிக ஒதுக்கீடு வழங்கப்பட்டு, இன்று 9ம் தேதி மாணவர்களுக்கான இறுதி ஒதுக்கீடு உத்தரவானது வழங்கப்பட்டது.

இது குறித்து பொறியியல் மாணவர் சேர்க்கை குழு வெளியிட்டுள்ள அறிவிப்பில், “துணை கலந்தாய்வில் பொது பிரிவில் (கல்வியில்) மாணவர்களுக்கு 50 ஆயிரத்து 416 இடங்கள் அனுமதிக்கப்பட்டன. இந்த இடங்களுக்கு விண்ணப்பித்த 12 ஆயிரத்து 978 மாணவர்களில் 10 ஆயிரத்து 108 மாணவர்கள் தாங்கள் விரும்பும் கல்லூரிகளை பதிவு செய்தனர்.

மேலும் அவர்களில், 9 ஆயிரத்து 633 மாணவர்களுக்கு கல்லூரிகளில் தற்காலிகமாக இடம் ஒதுக்கப்பட்டது. அதில் 8 ஆயிரத்து 713 மாணவர்கள் கல்லூரியில் சேர விருப்பம் தெரிவித்துள்ளனர். அதேபோல் அரசு பள்ளி மாணவர்களுக்கான 7.5 சதவீதம் இட ஒதுக்கீட்டில், 784 இடங்கள் காலியாக இருந்தன. அந்த இடங்களில் சேர்வதற்கு 4 ஆயிரத்து 388 பேர் தகுதி பெற்றனர். அவர்களில் 905 மாணவர்கள் தங்களுக்கு விரும்பிய கல்லூரிகளை பதிவு செய்தனர்.

அதில் 450 மாணவர்களுக்கு தற்காலிகமாக இடம் ஒதுக்கீடு செய்யப்பட்டதில், 360 மாணவர்கள் கல்லூரியில் சேர்வதற்கு இடங்களை உறுதி செய்துள்ளனர். மேலும், தொழிற்பிரிவு மாணவர்களுக்கான பொது கலந்தாய்வில் 2 ஆயிரத்து 27 இடங்களுக்கு 266 மாணவர்கள் விண்ணப்பம் செய்தனர். அவர்களில் 157 மாணவர்கள் விண்ணப்பங்களை பதிவு செய்ததில், 176 மாணவர்களுக்கு கல்லூரியில் சேர்வதற்கு இடம் ஒதுக்கீடு செய்யப்பட்டது‌.

தற்போது அவர்களில், 156 மாணவர்கள் கல்லூரியில் சேர்வதற்கான இடத்தை உறுதி செய்துள்ளனர். அதே போல் அரசு பள்ளி மாணவர்களுக்கான 7.5 சதவீத இட ஒதுக்கீட்டில் 84 இடங்கள் காலியாக இருந்தன. அதில் சேர்வதற்கு 78 மாணவர்கள் தகுதி பெற்றதைத் தொடர்ந்து, அவர்களில் 21 மாணவர்கள் தாங்கள் விரும்பும் கல்லூரியை பதிவு செய்தனர்.அதில் 20 மாணவர்களுக்கு தற்காலிகமாக இடம் ஒதுக்கீடு செய்யப்பட்டது. மேலும், 18 மாணவர்கள் தங்களுக்கான கல்லூரி இடங்களை உறுதி செய்துள்ளனர்.

மேலும் பொறியியல் படிப்பில் மாணவர்கள் சேர்வதற்கான துணை கலந்தாய்வில் 53 ஆயிரத்து 311 இடங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டதில், 9 ஆயிரத்து 247 இடங்களில் மாணவர்கள் சேர்ந்துள்ளனர். இந்நிலையில் இந்த ஆண்டு 44 ஆயிரத்து 84 இடங்கள் மாணவர்களுக்கு ஒதுக்கீடு செய்யப்படாமல் காலியாக உள்ளது” என தெரிவிக்கப்பட்டு உள்ளது.

இதையும் படிங்க: "நம்பிக்கையின்மையை அகற்ற மனிதநேய அணுகுமுறையை கடைப்பிடிப்போம்"- ஜி20 மாநாட்டில் பிரதமர் மோடி முன்னுரை!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.