ETV Bharat / state

10, 11ஆம் வகுப்புகளுக்கு துணைத் தேர்வு அறிவிப்பு - TN 10th supplementary exam 2023 Announced

10, 11ஆம் வகுப்பில் தேர்ச்சிப்பெறாத மாணவர்களுக்கான துணைத்தேர்விற்கு 23ஆம் தேதி முதல் 27ஆம் தேதி வரையில் விண்ணப்பிக்கலாம் என அரசுத் தேர்வுத்துறை அறிவித்துள்ளது.

Etv Bharat
Etv Bharat
author img

By

Published : May 19, 2023, 5:06 PM IST

சென்னை: தமிழ்நாட்டில் பொதுத் தேர்வு எழுதிய 9 லட்சத்து 14 ஆயிரத்து 320 மாணவர்களுக்கான 10ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் இன்று (மே 19) காலை 10:00 மணிக்கும், பொதுத் தேர்வு எழுதிய 7 லட்சத்து 76 ஆயிரத்து 844 மாணவர்களுக்கான 11ஆம் வகுப்பு தேர்வு முடிவுகளும் இன்று மதியம் 2:00 மணிக்கு பள்ளிக்கல்விக்கான தேர்வுத்துறை வெளியிட்டது.

இந்த முடிவுகளின்படி, 10ஆம் வகுப்பு பொதுத் தேர்வு எழுதியவர்களில் 91.39% என 8 லட்சத்து 35 ஆயிரத்து 614 மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர். அதில், 4 லட்சத்து 30 ஆயிரத்து 710 பேர் மாணவியர்கள் தேர்ச்சிப் பெற்று, 94.66% மாணவியர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர். 4 லட்சத்து 4 ஆயிரத்து 904 மாணவர்கள் தேர்ச்சிப் பெற்று, 88.16% மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர். இதன்மூலம், இந்த ஆண்டும் தேர்ச்சி விகிதத்தில் மாணவர்களை முந்திய மாணவியர்களின் தேர்ச்சி விகிதம் 6.50 சதவீதம் என அதிகமாக உள்ளது.

11ஆம் வகுப்பு பொதுத் தேர்வு எழுதிய 7 லட்சத்து 6 ஆயிரத்து 413 மாணவர்கள் தேர்ச்சிப் பெற்று உள்ளனர். இதன்மூலம், தமிழ்நாட்டில் தேர்ச்சி சதவீதம் 90.93 சதவீதமாக உள்ளது. இந்த தேர்வு எழுதிய 4 லட்சத்து 15 ஆயிரத்து 389 மாணவியர்களில் 3 லட்சத்து 91 ஆயிரத்து 968 பேர் தேர்ச்சிப் பெற்று 94.36% என தேர்ச்சி விகிதம் உள்ளது. இந்த நிலையில், 86.99 சதவீதம் என 3 லட்சத்து 14 ஆயிரத்து 444 மாணவர்கள் தேர்ச்சிப்பெற்ற நிலையில், வழக்கம்போல, மாணவர்களை விட 7.37% என தேர்ச்சி பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

இதனிடையே 10, 11ஆம் வகுப்பில் தேர்ச்சிப்பெறாத மாணவர்களுக்கள் துணைத்தேர்விற்கு 23ஆம் தேதி முதல் 27ஆம் தேதி வரையில் விண்ணப்பிக்கலாம் என அரசுத் தேர்வுத்துறை இயக்குநர் சேதுராமவர்மா தெரிவித்துள்ளார். இது குறித்து அரசுத் தேர்வுத்துறை இயக்குநர் சேதுராமவர்மா இன்று (மே 19) வெளியிட்ட செய்திக்குறிப்பில், '10, 11ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் இன்று வெளியிடப்பட்டுள்ளன.

இதையும் படிங்க: 10ம் வகுப்பு தேர்வில் அபாரம்: மாணவிகளை முதல்வர் இருக்கையில் அமர வைத்த பள்ளி நிர்வாகம்!

இதனைத்தாெடர்ந்து, தற்காலிக மதிப்பெண்கள் சான்றிதழ் அல்லது மதிப்பெண்கள் பட்டியலை 26ஆம் தேதி முதல் பள்ளி மாணவர்கள் அவர்கள் படித்தப் பள்ளியிலும், தனித்தேர்வர்கள் தாங்கள் தேர்வு எழுதியப் பள்ளியிலும் பெற்றுக்கொள்ளலாம். 11ஆம் வகுப்பில் விடைத்தாள் நகல் மற்றும் மறுகூட்டல் கேட்கும் மாணவர்கள் தாங்கள் படித்த பள்ளியின் மூலமாகவும், தனித்தேர்வர்கள் தாங்கள் தேர்வு எழுதிய மையங்களிலும் 24ஆம் தேதி முதல் 27ஆம் தேதி வரையில் விண்ணப்பிக்கலாம்.

மேலும், தேர்வில் தேர்ச்சி பெறத் தவறிய 10, 11ஆம் வகுப்பு மாணவர்களின் எதிர்கால நலன் கருதி துணைத்தேர்வு ஜூன் 27ஆம் தேதி முதல் நடைபெற உள்ளது. இந்தத் தேர்வினை எழுதுவதற்கு வரும் 23ஆம் தேதி முதல் 27ஆம் தேதி வரையிலும் பள்ளி மாணவர்கள் படித்தப் பள்ளியின் மூலமாகவும், தனித்தேர்வர்கள் அரசுத் தேர்வுத்துறை சேவை மையங்கள் மூலமாகவும் விண்ணப்பிக்க வேண்டும். இந்த நாட்களில் விண்ணப்பம் செய்யாதவர்கள் சிறப்பு அனுமதித் திட்டத்தில் 30, 31 ஆகிய தேதிகளில் விண்ணப்பிக்கலாம்.

10ஆம் வகுப்பு மாணவர்களுக்கான துணைத்தேர்வுகள் ஜூன் மாதம் 27 முதல் ஜூலை மாதம் 4ஆம் தேதி வரையில் நடைபெறுகிறது. ஜூன் 27ஆம் தேதி தமிழ், ஜூன் 28ஆம் தேதி ஆங்கிலம், ஜூன் 30ஆம் தேதி கணக்கு, ஜூலை 1ஆம் தேதி விருப்ப மொழிப்பாடம், ஜூலை 3ஆம் தேதி அறிவியல், ஜூலை 4ஆம் தேதி சமூக அறிவியல் தேர்வுகள் நடைபெற உள்ளது' என்று கூறப்பட்டுள்ளது. மேலும், பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வில் 78ஆயிரத்து 706 மாணவர்கள் தேர்ச்சிப் பெறவில்லை. 11ஆம் வகுப்பு பொதுத் தேர்விலும் 70,431 மாணவர்கள் தேர்ச்சிப்பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: 78,706 பேர் 10ம் வகுப்பு தேர்வில் தோல்வி.. "அஞ்ச வேண்டாம் துணைத் தேர்வு இருக்கு"

ABOUT THE AUTHOR

author-img

...view details

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.