ETV Bharat / state

உதயநிதி அமைச்சராவதற்குத் தகுதியானவரா? - டி.கே.எஸ் இளங்கோவன் சிறப்பு நேர்காணல் - உதயநிதி ஸ்டாலின்

திமுகவின் ஓராண்டு சாதனை என்ன என்பது குறித்தும், உதயநிதி ஸ்டாலின் அமைச்சராவதற்குத் தகுதியானவரா என்பது குறித்தும் ''ஈடிவி பாரத் தமிழ்நாடு'' ஊடகத்திற்கு திமுகவின் செய்தித் தொடர்பாளர் டி.கே.எஸ் இளங்கோவன் அளித்த சிறப்பு நேர்காணல்.

Etv Bharat
Etv Bharat
author img

By

Published : Dec 12, 2022, 5:56 PM IST

Updated : Dec 12, 2022, 6:14 PM IST

டி.கே.எஸ் இளங்கோவன் சிறப்பு நேர்காணல்

சென்னை: திமுக ஆட்சிக்கு வந்து ஓராண்டு காலமான நிலையில் ஓராண்டு சாதனைகள் குறித்தும், சட்டப்பேரவை உறுப்பினரான உதயநிதி ஸ்டாலின் அமைச்சராவதற்குத் தகுதி உடையவரா என்பது உள்ளிட்ட பல்வேறு கேள்விகளுக்கும் திமுக செய்தித்தொடர்பாளர் டி.கே.எஸ். இளங்கோவன் விளக்கம் அளித்துள்ளார். நேர்காணலில் கேட்கப்பட்ட கேள்விகள் மற்றும் பதிலை கீழே காண்போம்.

கேள்வி: கடந்த ஓர் ஆண்டில் திமுகவின் சாதனைகள் என்னென்ன?

பதில்: “தமிழ்நாட்டில் தொழில் வளர்ச்சிக்கு நிறைய செய்திருக்கிறார்கள். புதிய தொழில் நிறுவனங்கள் இங்கே தொழில் தொடங்க வந்திருக்கிறார்கள். அதற்கான அனுமதி வழங்கப்பட்டு வேலை வாய்ப்புகள், அதிகரிக்கக் கூடிய பல திட்டங்கள் நிறைவேற்றப்பட்டு வருகின்றன. அரசுப் பணிகளில் உள்ள காலியான இடங்களை எல்லாம் நிரப்ப, விண்ணப்பங்கள் வரவேற்கப்பட்டுள்ளன.

முக்கியமாக வேலைவாய்ப்புகளை உருவாக்குவது, கல்வி மேம்பாட்டிற்கு பாடுபடுவது என்ற இரண்டு துறையிலும் சரியாக திட்டமிட்டு செயல்பட்டு பல வெற்றிகளுக்கு வழிவகை செய்யப்பட்டுள்ளது. தேர்தல் அறிக்கையை செயல்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. குறிப்பாக விவசாயப் பெருமக்களுக்கு ஒரு லட்சம் இலவச மின் இணைப்பு வழங்கப்பட்டுள்ளது. மழைநீர் தேங்காமல் இருக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதற்கான பலனை இந்த ஆண்டு காண முடிந்தது.

கேள்வி: சென்னையில் மழை நீர் வடியக் காரணம் என்ன?

பதில்: கடந்த ஆண்டை விட இந்தாண்டு அதிக மழை பெய்தாலும், மழை நீர் தேங்காத அளவுக்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மீதமுள்ள வடிகால் பணிகள் முழுவதும் முடிக்கப்பட்டு, மழை நீர் தேங்காத வண்ணம் திட்டமிட்டு முதலமைச்சர் செயல்பட்டு இருக்கிறார்.

கேள்வி: தாய் கழகமான திமுகவில் இனிமேல் தொண்டர்கள் இணைவார்களா?

பதில்: அதிமுக என்பது எம்ஜிஆரால் தொடங்கப்பட்டு ஜெயலலிதா வழிநடத்திய கட்சி. இப்பொழுது அந்தக் கட்சிக்கு யார் தலைவர் என்று குழப்பம் ஏற்பட்டுள்ளது. அந்தக் கட்சிக்கு நான் தலைவரா? நீ தலைவரா என்ற போட்டியில், பிளவுபட்டு தற்போது நான்காக உள்ளது. தலைமையற்ற ஒரு கட்சியாக அது இருக்கும் போது வளர்வதற்கான வாய்ப்பு கிடையாது.

எந்த கட்சியிலும் யார் தலைவர் என்ற கேள்வி வரும்போது அது கட்சிக்குள் பெரிய சிக்கலை உண்டாக்கும். அந்தச் சிக்கலில் தற்போது அதிமுக மாட்டி தவிக்கிறது. தலைவர் யார் என்று தெரியாமலே தொடர்ந்து, அக்கட்சியில் எவ்வளவு பேர் நீடிப்பார்கள் என்பது தெரியாது. அந்த வகையில் பலரும் அதிமுகவிலிருந்து திமுகவுக்கு வரக்கூடும்.

கேள்வி: அதிமுகவின் முக்கிய நிர்வாகியாக இருந்த அமைச்சர் செந்தில் பாலாஜி, பழனியப்பன் ஆகியோர் திமுகவிற்கு வருவது பலமா?

பதில்: அதிமுகவில் செல்வாக்காக இருந்தவர்கள், அதிமுகவை நடத்திச் சென்று முக்கியப் பொறுப்புகளில் இருந்தவர்கள், அந்த கட்சியின் மீது நம்பிக்கை இழந்து திமுகவில் வந்து சேரும் போது, அதிமுக கட்சியில் இருப்பவர்களுக்கு நம்பிக்கை இன்மை நிச்சயமாக வரும். இதனால், திமுகவுக்கு நிச்சயமாக லாபம் தான்.

கேள்வி: வருகின்ற நாடாளுமன்றத் தேர்தலில் திமுகவின் கூட்டணியில் தற்போது உள்ள கூட்டணி தொடருமா?

பதில்: தற்போது திமுகவில் உள்ள கூட்டணி கட்சிகளின் கூட்டணி வலுவாக உள்ளது. கூட்டணி கட்சித் தலைவர்கள் அனைவரும் ஒற்றுமையாக இருக்கிறார்கள். ஆளுநர் பிரச்சனையில் கூட அனைவருமே ஒப்புக்கொண்டு, இணைந்து ஆளுநரை மாற்ற வேண்டும் என்று கோரிக்கை மனுவில் கையெழுத்திட்டு அனுப்பி இருக்கிறார்கள். கூட்டணியில் மாற்றம் இல்லை. கூட்டணி மாற்றம் என்பது புதிதாக வேறு கட்சிகள் வருவதற்கு வாய்ப்புகள் அதிகமாக உள்ளன.

கேள்வி: ஆன்லைன் சூதாட்ட தடை மசோதா உள்ளிட்ட 21 மசோதாவிற்கு ஆளுநர் ஒப்புதல் வழங்காதது ஏன்?

பதில்: ஆளுநரை நியமிப்பதற்கு ஒரே காரணம் சட்டப்பேரவையில் நிறைவேற்றக்கூடிய, தீர்மானங்களுக்கு ஒப்புதல் வழங்குவது அவரது வேலை. சட்டப்பேரவையின் தலைவர் ஆளுநர் என்பதால் சட்டப்பேரவை தொடக்க கூட்டத்தொடரில் தமிழக அரசின் கொள்கை நிலைப்பாட்டை தன்னுடைய உரையில் வழங்கக்கூடிய வேலை, முதலமைச்சர் மற்றும் பிற அமைச்சர்களுக்கு பதவி பிரமாணம் செய்து வைப்பது ஆளுநரின் வேலை.

இதைத் தாண்டி ஒன்றும் இல்லை. இதைக் காட்டிலும் முக்கியமான வேலை சட்டப்பேரவையில் இயற்றப்பட்ட, சட்டங்களுக்கும், தீர்மானங்களுக்கும், ஒப்புதல் கொடுப்பது, அனுமதி கொடுப்பது, அதனை நடைமுறைக்குக் கொண்டு வருவது. மூன்று வகையாக சட்டங்களைப் பிரிக்கலாம், அரசியலமைப்புச் சட்டத்தின் படி, மாநில அரசுக்கான சில துறைகள், ஒன்றிய அரசுக்கான சில துறைகள், ஒன்றிய மற்றும் மாநில அரசு சேர்ந்து சில துறைகளுக்கு இயற்றக்கூடிய சட்டங்கள் இருக்கின்றன.

ஒத்திசைவு பட்டியலில் மாநில அரசு சட்டத்தை இயற்றினால் அது ஒன்றிய அரசின் சட்டத்திற்கு முரண்பட்டதாக இருந்தால், ஆளுநர் இது குறித்து தெரிவிக்கலாம். மாநில அரசின் அதிகாரத்தில் உள்ள, மாநிலப் பட்டியலில் உள்ள துறைகளின் சட்டங்களுக்கு உடனடியாக கையொப்பம் விடுவதைத் தவிர, சட்டப் பிரச்னை ஏதேனும் இருந்தால் உடனடியாகத் தெரிவித்தால் போதும். இதைத் தவிர ஆளுநருக்கு பெரிய வேலை ஒன்றும் இல்லை.

சட்டப்பேரவையில் இயற்றக்கூடிய சட்டங்களைப் பார்த்த பின்னர் இது சரியா, தவறா என்று பார்த்து ஆளுநர் தெரிவிக்க வேண்டும். அமைச்சர்களுக்கு தினமும் கோப்புகளில் கையெழுத்திட வேண்டும். மக்களை சந்திக்க வேண்டும். இப்படி பல வேலைகள் உள்ளன. ஆனால், ஆளுநருக்கு அரசாங்கத்திலிருந்து வருகின்ற சட்ட முன் வடிவுகளை அல்லது சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள், தலைமைச் செயலாளரிடமிருந்து, வருகின்ற உத்தரவுகளுக்கு கையெழுத்திடுவது மட்டும் தான் அவருடைய வேலை.

இதையே ஆளுநர் செய்யவில்லை என்றால், அவருக்கு செய்ய வேண்டாம் என மேலிருந்து அழுத்தம் தரப்படுகிறது. அவர்கள் சொல்வதைக் கேட்டுக் கொண்டு பயந்து பதவியில் இருக்க வேண்டும் என்றால், யாரோ சொல்வதைக் கேட்க வேண்டிய நிலையில் ஆளுநர் உள்ளார்.

கேள்வி: ஆளுநர் மதவாதத்தையும், பிரிவினை வாதத்தையும் தூக்கிப் பிடிக்கிறாரா?

பதில்: ஆளுநருடனும் ஒன்றிய அரசுடனும் திமுகவின் கருத்து மோதல் இருந்து வருகிறது. நாங்கள் அதனை அரசியல் அடிப்படையில் சந்திப்போமே தவிர, ஜெயலலிதா செய்த நடவடிக்கை போன்று நாங்கள் ஈடுபட்டதில்லை, இனி ஈடுபடப்போவதும் இல்லை. அதிகபட்சமாக கறுப்புக் கொடி காட்டுவோம் அதுவும் எதிர்ப்பை தெரிவிப்பதற்காக மட்டுமே.
அதைத்தவிர நேரடித் தாக்குதல், வன்முறைகளில் திமுக என்றும் ஈடுபடாது. இந்தியாவின் பெருமையே உலக அரங்கில் வேற்றுமையில் ஒற்றுமை தான்.

பல மொழிகள், பல பண்பாடுகள், பல பல கலாசாரம், பல இனங்கள் கொண்டவர்கள் வாழ்கிறார்கள் என்பதுதான் இந்தியாவின் பெருமை. ஒரே நாடு, ஒரே மொழி, ஒரே பண்பாடு என்பது பெருமைக்குரிய விஷயம் இல்லை. இன்று, ஆளுபவருக்கு இது தெரியவில்லை. வேற்றுமையில் ஒற்றுமை என்பதுதான் உலகமே இந்தியாவை மதிக்கின்ற ஒன்று. இதனை மறந்துவிட்டு, ஒரே நாடு ஒரே கொள்கை, ஒரே சிந்தனை என்று சொல்வது, உலக மக்கள் எதற்காக மதிக்கிறார்களோ, அந்த மதிப்பையே நீக்குவதற்கு, களைவதற்காக இவர்கள் முயற்சி செய்கிறார்கள்.

கேள்வி: பெரியார் சிலையை அவமானப்படுத்துவேன் என்று சொல்லி வரும் அர்ஜூன் சம்பத் குறித்து தங்களின் எண்ணம்?

பதில்: அர்ஜூன் சம்பத் போன்ற 90 சதவீத பிற்படுத்தப்பட்ட மக்களின் முன்னேற்றத்திற்காக அவர்களின் கல்வி வாய்ப்புக்காக அவர்களுக்கு மரியாதை ஏற்படுத்தித் தருவதற்காக, அவர்களுக்கு சமுதாயத்தில் சமநிலையை உருவாக்குவதற்காக, 90 சதவீத இந்துக்களுக்காக, உருவான இயக்கம் தான், திராவிட இயக்கம்.

அர்ஜூன் சம்பத் எதை இந்து என்று சொல்கிறார், இது இந்து மதம் இல்லை, சமத்துவம் இருக்கக் கூடாது, நானும் மேல் சாதிக் காரனுக்கு, கைகட்டி நிற்க வேண்டும். நீங்களும் கைகட்டி நில்லுங்கள் என்று அர்ஜுன் சம்பத் சொல்கிறாரா என்பது எனக்குப் புரியவில்லை. அவர் பாதுகாப்பது வர்ணாஸ்ரம தர்மத்தை என்று கருதுகிறேன்.

மக்களுக்கு எதிரி அல்ல இந்த இயக்கம். இந்தப் பழக்கவழக்கங்களினால் பிறப்பினால் மக்கள் மேலானவர்களாகவும் கீழானவர்களாகவும், வாய்ப்புகள் எல்லாம் வழங்க தகுதியற்றவர்கள் என்று சொல்லக்கூடிய, அந்த நிலையத்தான் எதிர்த்து இந்த இயக்கம் உருவானது. அதிலிருந்து மக்களை மீட்டு, இன்றைக்கு பல இனத்தைச் சேர்ந்தவர்கள் படித்து, முன்னேறி இருக்கிறார்கள். இதற்கு ஆபத்து ஏற்படும் வகையில் சில அரசியல் கட்சிகள் முயற்சி செய்து வருகின்றனர். இவர்களிடமிருந்து மக்களையும் மீட்க எங்களுடைய போராட்டம் தீவிரமடைந்துள்ளது.

கேள்வி: உதயநிதி ஸ்டாலின் அமைச்சராவதற்குத் தகுதியானவரா? அவர் எப்போது எப்போது அமைச்சராவார்?

பதில்: திமுக தலைவரின் நிலையை அறிந்து நாங்கள் அவரிடம் பேச வேண்டும், எங்களுடைய ஆசைகளை எல்லாம் அவர் மீது திணிக்க முடியாது. உதயநிதி ஸ்டாலின் அமைச்சராவதற்குத் தகுதியானவர்.

அந்த தகுதியின் அடிப்படையில், முதலமைச்சர், அமைச்சரவையில் உதயநிதி ஸ்டாலினை தேர்ந்தெடுத்தால் மகிழ்ச்சியோடு ஏற்றுக் கொள்வோம். ஆனால் இது குறித்து முடிவு எடுக்கிற வேண்டிய இடத்தில் முதலமைச்சர் உள்ளார்.

கேள்வி: உதயநிதி ஸ்டாலினுக்கு எதிராகப் போட்டியிடும் சவுக்கு சங்கர்?

பதில்: சவுக்கு சங்கருக்கு ஜெயிக்கிற எண்ணம் இல்லை. சவுக்கு சங்கருக்கு வெற்றி பெற வேண்டும்,
சட்டப்பேரவைக்குச் செல்ல வேண்டும் என்கிற எண்ணம் அவருக்கு இல்லை என நினைக்கிறேன்.

கேள்வி: சவுக்கு சங்கர் மீது போடப்பட்ட வழக்கு என்பது பேச்சு உரிமையைப் பாதிக்கிறதா?

பதில்: அரசியலமைப்புச் சட்டம் பேச்சுரிமையைத் தடுப்பது இல்லை. என் மீது அவதூறு சொல்லக் கூடாது என்பதை சட்டம் சொல்கிறது. தனி மனிதனின் மரியாதையை காப்பாற்ற வேண்டிய கடமை இந்த அரசாங்கத்திற்கு உடையது. பேச்சுரிமையை இங்கே யாரும் தடை செய்யவில்லை. அரசாங்கம் சரியில்லை, திட்டங்கள் சரியாக நிறைவேற்றவில்லை என அநேக பேர் திமுகவை குறை சொல்லி வருகின்றனர்.

இப்படி பேசுகின்ற எல்லோரையும் சிறை பிடிக்கவில்லை. தனிப்பட்ட முறையிலே என்னுடைய சுயமரியாதைக்கு இழுக்கு ஏற்படும் வகையில் பேசுவது சட்டப்படி குற்றம். அந்த சட்டத்தின் அடிப்படையில் சவுக்கு சங்கர் கைது செய்யப்பட்டார். நீதிமன்றமும் இனிமேல் இவ்வாறு பேசினால் மீண்டும் சிறையில் அடைக்க நேரிடும் என்று சொல்லி தான் வெளியில் அனுப்பியுள்ளது.

கேள்வி: உச்ச நீதிமன்ற நியமனத்தில், நீதிபதிகள், அரசியல்வாதிகள் காலில் விழுந்து தான் நீதிபதிகள் ஆகின்றனர் என்று
துக்ளக் குருமூர்த்தி பேசியது சரியானதா?

பதில்: இதற்கு ஒன்றிய அரசு தான் பதில் சொல்ல வேண்டும், தற்போது தலைமை நீதிபதி, நீங்கள் யார், நீதிபதி நியமனத்தில் தலையிடுவது என்று சண்டை போடுகிறார். அரசியல் கட்சியான பாஜக, இதில் தலையிடுகிற காரணத்தால் தான் இவ்வாறு சொல்கிறார். குருமூர்த்தி சொன்னது ஒன்றிய பாஜக அரசுக்கான கண்டனமாக நான் ஏற்றுக்கொள்கிறேன்.

கேள்வி: பெண்களுக்கு ஆயிரம் ரூபாய் வழங்கும் திட்டம் எப்போது தொடங்கப்படும்?

பதில்: பெண்களுக்கு ஆயிரம் ரூபாய் வழங்கும் திட்டம் கண்டிப்பாக தொடங்கப்படும். தேர்தல் அறிக்கைகளில் கூட சொல்லாததை, திருச்சி மாநாட்டில் முதலமைச்சர் ஸ்டாலின் சொல்லியிருந்தார். நிதிநிலை சரியான பிறகு, குடும்பப் பெண்களுக்கு, ஆயிரம் ரூபாய் வழங்கும் திட்டம் வெகுவிரைவில் அறிவிக்கப்படும்.

கேள்வி: கல்விக்கண் திறந்த காமராசருக்கு ஏன் சிலை வைக்கவில்லை?

பதில்: காமராஜர் பெயரில் பல்கலைக்கழகத்தை அமைத்தது, திமுக அரசு. காமராஜர் பிறந்தநாளை கல்வி வளர்ச்சி நாள் என்று அறிவித்தது, திமுக அரசு. காமராஜர் கல்வித்துறையில் செய்த, எந்த செயல்பாடுகளையும் நாங்கள் மறக்கவில்லை. அவற்றை கொண்டாடி வருகிறோம்.

ஒரு கட்டட வளாகத்திற்கு பேராசிரியர் அன்பழகன் பெயரை வைக்கிறோம். அவருக்கு சிலை வைக்கிறோம். காமராஜருக்கு சென்னையில் முதன்முதலாக சிலை வைத்தது திமுக தான், காங்கிரஸ் கட்சி கூட செய்யவில்லை. திமுக காமராஜரை புறக்கணிக்கவில்லை.

ஆட்சியில் சமத்துவத்தை உருவாக்கினார், மறைந்த திமுக தலைவர் கருணாநிதி. மறைந்த திமுக தலைவர் கருணாநிதி, தந்தை பெரியார், அண்ணா ஆகியோருடனான செயல்பாடு கொள்கை சார்ந்து இருந்தது. மறைந்த திமுக தலைவர் கருணாநிதி வகுத்து தந்த வழியில், பாதை மாறாமல் பயணிக்கிறார் தற்போதைய முதலமைச்சர் ஸ்டாலின்.

இதையும் படிங்க: குஜராத் முதலமைச்சராக பூபேந்திர படேல் பதவியேற்றார்

Last Updated : Dec 12, 2022, 6:14 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.