Tiruvottriyur building collapse:சென்னை: திருவொற்றியூரில் தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்தினால் 1993இல் கட்டப்பட்ட பழைய குடியிருப்பு நேற்று ( டிசம்பர் 27 ) இடிந்து விழுந்ததில் 24 வீடுகள் முழுவதுமாக சேதமடைந்தன.
'D' பிளாக் குடியிருப்புக் கட்டடத்தில் விரிசல் ஏற்பட்டதை அறிந்து, இதுகுறித்து உடனடியாக அப்பகுதியைச் சேர்ந்த தனியரசு என்பவர் தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய அலுவலர்களுக்குத் தகவல் தெரிவித்தார்.
மேலும், அக்கட்டடத்தில் விரிசல் அதிகமாவதைக் கண்டறிந்து, மக்களை உடனடியாக பாதுகாப்பாக வெளியேறிட எச்சரிக்கை செய்ததால் இவ்விபத்தில் பெரும் உயிரிழப்புத் தடுக்கப்பட்டது.
திருவொற்றியூர் தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய பழைய குடியிருப்பு இடிந்து விழுவதற்கு முன்பாக, தக்க தருணத்தில் குடியிருப்புவாசிகளை எச்சரிக்கை செய்து, அனைவரையும் துரிதமாக வெளியேற்றி உயிரிழப்பு ஏற்படாமல் தடுத்த தனியரசுவை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் அழைத்துப் பாராட்டினார்.
இந்நிகழ்வின்போது, சட்டப்பேரவை உறுப்பினர்கள் கதர்சனம், கே.பி.சங்கர் ஆகியோர் உடனிருந்தனர்.
இதையும் படிங்க: மாணவனை காதலித்த பெண் ஆசிரியர் போக்சோவில் கைது