சென்னை திருவொற்றியூரில் இரண்டாயிரம் ஆண்டுகள் பழமையான தியாகராஜ சுவாமி வடிவுடையம்மன் கோயிலில் மாசித்திருவிழாவை முன்னிட்டு தேரோட்ட விழா நடைபெற்றது. அதில் மூலவர் சந்திரசேகரர் திரிபுரசுந்தரி தாயார் தேரில் காட்சியளித்தார். அதில் கலந்துகொண்ட ஆயிரக்கணக்கான பக்தர்கள் தியாகராயா, ஆரோகரா நமச்சிவாய என பக்தி கோஷங்கள் எழுப்பி தேரை வடம்பிடித்து இழுத்தனர்.
திருவொற்றியூர் நெடுஞ்சாலையில் மெட்ரோ திட்டப்பணிகளால் 42 அடி உயரத்தேர் செல்ல மெட்ரோ தூண்கள் இடையூறாகயிருக்கும் என்பதனால், கோரிக்கையின் அடிப்படையில் மெட்ரோ நிர்வாகம் தூண்களை உயர்த்தி பாதை அமைத்துகொடுத்துள்ளது. அதனால் போக்குவரத்து நெரிசல் வெகுவாகக் குறைக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: வேதாரண்யேஸ்வரர் மாசிமக திருவிழா தேரோட்டம்: ஓ.எஸ். மணியன் தொடங்கிவைப்பு