தமிழ்நாட்டிலுள்ள திண்டுக்கல், திருப்பூர், தேனி, மதுரை ஆகிய மாவட்டங்களில் அடுத்த ஒரு மணி நேரத்தில் மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை மையம் தகவல் தெரிவித்துள்ளது. இங்கு இடி மின்னலுடன் கூடிய இலேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
ஏனைய மாவட்டங்களில் பெரும்பாலும் வறண்ட வானிலையே நிலவும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.