ETV Bharat / state

தாம்பரம் அருகே பூட்டியிருந்த வீட்டில் 27 சவரன் தங்க நகைகள் கொள்ளை: போலீசார் தீவிர விசாரணை - three women on a two wheel

தாம்பரம் மற்றும் அதன் சுற்றுப்புறப் பகுதிகளில் பகல் நேரத்தில் மூன்று பெண்கள் இருசக்கர வாகனத்தில் பூட்டியிருக்கும் வீடுகளை நோட்டமிட்டு இரவு நேரங்களில் கொள்ளைச் சம்பவங்களை அரங்கேற்றியுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தாம்பரம் அருகே பூட்டிருந்த வீட்டில் 27 சவரன் தங்க, வைர நகைகள் கொள்ளை: போலீசார் தீவிர விசாரணை

author img

By

Published : Aug 8, 2023, 9:13 PM IST

சென்னை: பூட்டியிருந்த வீட்டை உடைத்து ஒரு நாள் முழுவதும் வீட்டுக்குள் சாவகாசமாக இருந்து திருடிய சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னை தாம்பரம் அடுத்த முடிச்சூர் இராயப்பா நகர் பகுதியைச் சேர்ந்தவர் மோகன் (வயது 63). இவர் ஒரு தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார். இவர் தன் மனைவி மற்றும் இரண்டு மகள்களுடன் வசித்து வருகிறார்.

இந்த நிலையில் தனது மகளுக்குத் திருமணம் முடிவான நிலையில் திருமண அழைப்பிதழ் கொடுப்பதற்காக அவரின் சொந்த ஊரான கன்னியாகுமரிக்கு தனது மனைவி மற்றும் மகள்களுடன் சென்றுள்ளார். பின்னர் ஊரில் இருந்து மீண்டும் வீட்டிற்கு வந்த அவரது குடும்பத்தினர் வீட்டின் கதவு உடைக்கப்பட்டிருப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்தனர்.

பீரோவில் வைக்கப்பட்டிருந்த பொருட்கள் எல்லாம் கலைக்கப்பட்டு இருப்பதைக் கண்டுள்ளனர். மேலும் பீரோவில் வைத்திருந்த 27 சவரன் தங்க நகை, இரண்டு வைர கம்மல், வைர மோதிரம், வைர பிரேஸ்லெட் என நகைகள் திருடுபோனது தெரியவந்தது.

அதுமட்டுமின்றி வீட்டின் பாதுகாப்புக்காக வளர்க்கப்பட்டு வரும் நாய் யார் வந்தாலும் குறைத்துக் கொண்டே இருக்கும். ஆனால், கொள்ளை சம்பவம் அரங்கேறியது முதல் நாய் குரைக்காமல் இருப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

உடனே இந்தச் சம்பவம் குறித்து சோமங்கலம் காவல் நிலையத்தில் உள்ள குற்றப்பிரிவு போலீசாருக்குத் தகவல் தெரிவித்துள்ளனர். தகவலின் அடிப்படையில் விரைந்து சென்ற போலீசார் கைரேகை நிபுணர்களை வரவழைத்து வீட்டில் ஆய்வு மேற்கொண்டனர்.

மேலும் வீட்டிலிருந்த சிசிடிவி கேமராக்களை சேதப்படுத்தி டி.வி.ஆர் திருடப்பட்டு இருப்பதும் தெரியவந்தது. வீட்டைச் சுற்றி ஆய்வு மேற்கொண்ட போலீசார் வீட்டின் பின்புறத்தில் உள்ள மதில் சுவரில் ஏறி குதித்து, திருடர்கள் உள்ளே புகுந்து வீட்டுக்குள் ஒரு நாள் முழுவதும் இருந்து சாவகாசமாக கொள்ளை சம்பவத்தை அரங்கேற்றிச் சென்றது தெரியவந்தது.

அதுமட்டுமின்றி திருடிச்சென்ற சி.சி.டிவியின் டி.வி.ஆர் வீட்டின் அருகே உள்ள அடையாறு ஆற்றில் திருடன் வீசி சென்றதும் கண்டுபிடிக்கப்பட்டது. கொள்ளைச் சம்பவம் அரங்கேறிய பகுதியில் உள்ள சிசிடிவி கேமராவை ஆய்வு செய்தபோது, மூன்று பெண்கள் இருசக்கர வாகனத்தில் அப்பகுதியில் உள்ள வீடுகளில் கைகளை நீட்டி அடையாளம் செய்யும் காட்சிகள் கிடைத்துள்ளது. இதனைத் தொடர்ந்து, சிசிடிவி காட்சிகளைக் கைப்பற்றி போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

பகல் நேரத்தில் மூன்று பெண்கள் இருசக்கர வாகனத்தில் பூட்டியிருக்கும் வீடுகளை நோட்டமிட்டு இரவு நேரங்களில் கொள்ளை சம்பவங்களை அரங்கேற்றி இருப்பது அப்பகுதி மக்கள் இடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

இதையும் படிங்க: 13 வயது சிறுமியை கடத்தி 28 நாட்கள் கூட்டு பாலியல் வன்கொடுமை; பிகாரில் நடந்தது என்ன?

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.