ETV Bharat / state

பண மோசடி: கணவன், மனைவி உள்பட மூன்று பேர் கைது - பண மோசடியில் ஈடுபட்டவர்கள் கைது

சென்னை துறைமுகத்தில் வேலை வாங்கித் தருவதாக கூறி ரூ.54 லட்சம் பணம் பெற்று மோசடி செய்த வழக்கில் கணவன், மனைவி உள்பட மூன்று பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

money laundering  money laundering case  money laundering issues  chennai news  chennai latest news  crime news  three were arrested for money laundering  three were arrested in chennai for money laundering  chennai fort  சென்னை செய்திகள்  குற்றச் செய்துகள்  பண மோசடி  வாலை வாங்கித் தருவதாக கூறி பண மோசடி  பண மோசடியில் ஈடுபட்டவர்கள் கைது  சென்னையில் பண மோசடியில் ஈடுபட்டவர்கள் கைது
பண மோசடி
author img

By

Published : Nov 7, 2021, 8:02 PM IST

சென்னை: எண்ணூரில் உள்ள அசோக் லேலண்ட் (Ashok Leyland) நிறுவனத்தில் முதுநிலை மேலாளராக (Senior Manager) பணிபுரிந்தவர், வெங்கடேசன். இவர் கடந்த 2013ஆம் ஆண்டு நிறுவனத்திலிருந்து விருப்ப ஓய்வு பெற்றார்.

இவர் தனது மகனுக்கு வேலை தேடி வந்த நிலையில், அவரது நண்பர் ஆனந்த் என்பவர் மூலம் அறிமுகமான சுவாதீஸ்வரன் என்பவர், தான் சென்னை கப்பல் துறைமுகத்தில் உயர் பதவியில் உள்ளவர்களுடன் நெருக்கமாக இருப்பதாகவும், அவர்கள் மூலம் வெங்கடேசனின் மகன் விஜயராகவனுக்கு துறைமுகத்தில் காலியாக உள்ள இளநிலை செயல் அலுவலர் (Junior Executive officer) வேலையைப் பெற்று தருவதாகவும் ஆசை வார்த்தைகள் கூறியுள்ளார்.

பண மோசடி

மேலும் சுவாதீஸ்வரனின் மனைவி யாமினி (எ) அனிதா என்பவரும் சுவாதீஸ்வரனுக்கு உடந்தையாக செயல்பட்டுள்ளார். இவர்கள் இருவரும் இணைந்து, வெங்கடேசனிடம் கப்பல் துறையில் பணி புரியும் சில உயர் அலுவலர்கள் தங்களுக்கு நெருங்கிய குடும்ப நண்பர்கள் என்றும்; அவர்கள் மூலமாக கட்டாயம் துறைமுகத்தில் வேலை வாங்கித் தருவதாகவும் கூறியுள்ளனர்.

இதனை உண்மை என்று நம்பிய வெங்கடேசன் சுவாதீஸ்வரன் கேட்டபோதெல்லாம் கடந்த 2018 ஆகஸ்ட் மாதம் முதல் ஜனவரி 2021 வரை பல தவணைகளில் மொத்தம் ரூ.54 லட்சம் பணத்தைக் கொடுத்துள்ளார். ஆனால், அவர்கள் பணத்தை வாங்கிக்கொண்டு வேலை வாங்கித்தராமல் தலைமறைவாகினர்.

இது தொடர்பாக வெங்கடேசன் சென்னை காவல் ஆணையர் அவர்களிடம் புகார் கொடுத்துள்ளார். புகாரின் அடிப்படையில் மத்திய குற்றப்பிரிவு காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர்.

மேலும் வேலை வாய்ப்பு மோசடி புலனாய்வுப் பிரிவு ஆய்வாளர் தலைமையிலான காவல் குழுவினர், மோசடியில் ஈடுபட்டவர்களை தீவிரமாகத் தேடி வந்தனர்.

மூவர் கைது

இந்நிலையில் இவ்வழக்கில் தலைமறைவாக இருந்த கொரட்டூரைச் சேர்ந்த சுவாதீஸ்வரன் (37), இவரது மனைவி யாமினி (எ) அனிதா (36), துறைமுகத்தில் வேலை பார்ப்பதாகப் பொய் சொல்லி ஏமாற்றிய கொளத்தூரைச் சேர்ந்த சுரேஷ் (54) ஆகிய மூன்று பேரைக் கைது செய்தனர்.

பின்னர் அவர்களிடமிருந்து ஒரு மடிக்கணினி, இரண்டு கைப்பேசிகள் பறிமுதல் செய்யப்பட்டன. பின்னர் அவர்கள் மூவரிடமும் விசாரணை மேற்கொள்ளப்பட்டது. பின்னர் இவர்களை நீதிமன்றம் முன் நிறுத்தி, சிறையில் அடைத்தனர்.

இதையடுத்து, அரசு மற்றும் துறைமுகத்தில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி, அரசியல் பிரமுகர்கள் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் தொடர்பு உள்ளது என்று கூறி அவர்களுடன் எடுத்த புகைப்படங்களைக் காட்டி நம்பிக்கையூட்டி ஏமாற்றும், தரகர்களை நம்பி ஏமாறவேண்டாம் என்று சென்னை பெருநகர காவல் ஆணையர் பொதுமக்களிடம் கேட்டுக்கொண்டுள்ளார்.

இதையும் படிங்க: அரசு மருத்துவமனையில் தீ விபத்து - 11 கரோனா நோயாளிகள் உயிரிழந்த சோகம்!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.