வருவாய்த்துறையை நவீன மயமாக்கும் முயற்சியில் அரசு தீவிரமாக களம் இறங்கியுள்ளது. அதுமட்டுமின்றி ஆவணங்கள் அனைத்தும் கணினி மயமாக்கும் பணியில் மும்முரமாக அரசு ஈடுபட்டு வருகிறது.
இதன் ஒருபகுதியாக வருவாய் நிர்வாக ஆணையரக இணையதள சேவை, துணை ஆட்சியர்களுக்கான இணைய தளம், கிராம நிர்வாக அலுவலர்களுக்கான மாவட்ட மாறுதல் வலைத்தளம் உள்ளிட்ட இணையதள சேவைகள் தொடங்கப்பட்டது.
இதனை தலைமைச் செயலகத்தில் இன்று (அக்.13) முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் காணொலி காட்சி மூலமாகத் தொடங்கிவைத்தார். இந்த நிகழ்வில் தலைமைச் செயலாளர் இறையன்பு, கூடுதல் தலைமைச் செயலாளர்கள், வருவாய் நிர்வாக ஆணையர் உள்ளிட்ட அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
இதையும் படிங்க: கோயில் நகைகளை தங்கக் கட்டிகளாக மாற்றும் திட்டம் தொடக்கம்!