ETV Bharat / state

தமிழ்நாட்டில் அனைத்து ரயில் நிலையங்களுக்கும் மூன்றடுக்குப் பாதுகாப்பு..! - ரயில்வே பாதுகாப்புப் படை

தீபாவளிப் பண்டிகையையொட்டி தமிழ்நாட்டில் உள்ள அனைத்து ரயில் நிலையங்களுக்கும் மூன்றடுக்குப் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளதாக ரயில்வே காவல்துறை தகவல் தெரிவித்துள்ளது.

three
three
author img

By

Published : Oct 21, 2022, 10:33 PM IST

சென்னை: தீபாவளிப் பண்டிகையையொட்டி பயணிகள் மற்றும் பொதுமக்கள் பாதுகாப்பு கருதி அனைத்து ரயில் நிலையங்களிலும் சுமார் 1,700 போலீசார் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக ரயில்வே காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

ரயில்வே ஏ.டி.ஜி.பி வனிதா மேற்பார்வையில் 7 துணை காவல் கண்காணிப்பாளர்கள், 25 காவல் ஆய்வாளர்கள், 80 உதவி காவல் ஆய்வாளர்கள் மற்றும் 1,600 காவலர்களைக் கொண்டு ரயில் நிலையங்களில் தொடர் பாதுகாப்பு வழங்கப்படுவதாகவும், ரயில் நிலைய நுழைவு வாயில்களிலேயே அனைத்து பயணிகளின் உடைமைகள் சோதனை செய்யப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், தண்டவாள ரோந்து அலுவலுக்குக் காவலர்கள் நியமிக்கப்பட்டு 24 மணி நேரமும் கண்காணிப்பு பணி நடைபெற்று வருவதாகவும், பெண் பயணிகள் பாதுகாப்பிற்குச் சீருடை மற்றும் சாதாரண உடையில் காவலர்கள் நியமிக்கப்பட்டுப் பாதுகாப்பு வழங்கப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதேபோல் ரயில் நிலையங்கள் மற்றும் ரயில்களில் சாதாரண உடைகளில் காவலர்கள் கண்காணிப்பு பணியில் உள்ளதாகவும், ரயில்களில் வெடி பொருட்கள் எடுத்துச் செல்வதைக் கண்காணிக்கவும் தனிப்படை அமைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ரயில் நிலைய நுழைவு வாயில்கள் மற்றும் நடைமேடைகள் சிசிடிவி கேமரா மூலம் 24 மணி நேரமும் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருவதாகவும், ரயில் நிலையங்களில் குற்ற வழக்குகள் தொடர்புடைய நபர்கள் மற்றும் வடமாநில கொள்ளையர்களின் நடமாட்டத்தைக் கண்காணிக்கவும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதேபோல் முக்கிய ரயில் நிலையங்களான சென்னை சென்ட்ரல்- எழும்பூர், கோவை, மதுரை, சேலம், திருச்சி மற்றும் திருநெல்வேலி ஆகிய ரயில் நிலையங்களில் மோப்ப நாய்ப்படை மூலம் கண்காணிப்பு பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளதாகவும், ரயில்வே பாதுகாப்புப் படையுடன் ஒருங்கிணைந்து அசம்பாவிதங்களைத் தவிர்க்க அனைத்து பாதுகாப்பு நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் ரயில்வே காவல்துறை தகவல் தெரிவித்துள்ளது.

பயணிகள் 24 மணி நேரமும் காவல் உதவி மைய எண் 1,512 மற்றும் 9962500500 என்ற வாட்ஸ்-அப் எண்களில் பாதுகாப்பு சம்பந்தமான புகார்களைத் தெரிவிக்கலாம் எனவும் ரயில்வே காவல்துறை தகவல் தெரிவித்துள்ளது.

இதையும் படிங்க:விமானநிலைய ஊழியர்களுக்கு போனஸ் கிடையாது - ஒன்றிய நிதி அமைச்சகம்

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.