ETV Bharat / state

குரூப் 1 தேர்வில் ஒரு இடத்திற்கு 3,443 பேர் போட்டி - 3443 compete for each seat

குரூப் 1 பணியில் காலியாக உள்ள 92 இடங்களுக்கு 3 லட்சத்து 16 ஆயிரத்து 678 பேர் விண்ணப்பம் செய்துள்ளனர். ஒரு பணியிடத்திற்கு 3,443 பேர் போட்டியிடும் வகையில் விண்ணப்பம் செய்துள்ளனர்.

குருப் 1 தேர்வில் ஒரு இடத்திற்கு 3,443 பேர் போட்டி

author img

By

Published : Aug 23, 2022, 7:32 PM IST

Updated : Aug 23, 2022, 7:52 PM IST

சென்னை: தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையத்தால் நடத்தப்படும் குருப் 1 பணியில் காலியாக உள்ள 92 இடங்களுக்கு 3 லட்சத்து 16 ஆயிரத்து 678 பேர் விண்ணப்பம் செய்துள்ளனர். ஒரு பணியிடத்திற்கு 3,443 பேர் போட்டியிட்டு விண்ணப்பம் செய்துள்ளனர்.

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தால் குருப் 1 பணியில் துணை ஆட்சியர், துணை காவல் கண்காணிப்பாளர், வணிக வரித்துறை உதவி ஆணையர், கூட்டுறவு சங்க கூடுதல் பதிவாளர், ஊரகவளர்சித்துறை துணை இயக்குநர், மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர் ஆகிய 6 பதவிகளில் காலியாக உள்ள 92 பணியிடங்களை நிரப்புவதற்கான குரூப் 1 தேர்வுக்கு ஆகஸ்ட் 22ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டது.

விண்ணப்பதாரர்கள் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தின் அதிகாரப்பூர்வ இணையத்தளமான http://tnpsc.gov.in மூலம் விண்ணப்பிக்கலாம். ஆகஸ்ட் 27 முதல் 29ம் தேதி வரை விண்ணங்களின் திருத்தம் மேற்கொள்ளலாம் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் 92 இடங்களை நிரப்புவதற்கான குரூப் 1 முதல்நிலைத் தேர்வுக்கு 3,16,678 பேர் விண்ணப்பித்துள்ளனர். இவர்களுக்கான முதல்நிலைத் தேர்வு அக்டோபர் 30 ந் தேதி நடைபெற உள்ளது.

இதையும் படிங்க:பணியமர்த்தலில் உள்ள பாரபட்சங்களை நீக்க ஏஐ தொழில்நுட்ப வசதிகள் சிறந்த வழி...

Last Updated : Aug 23, 2022, 7:52 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.