ETV Bharat / state

Weekend Movie Release In Tamil: இந்த வாரம் 3 படம் ரிலீஸ்! எந்த படத்திற்கு போகலாம்னு பிளான் பண்ணிட்டீங்களா? - iraivan

தமிழ் திரையுலகில் இன்று (செ.28) ஒரே நாளில் 3 தமிழ் படங்கள் திரைக்கு வந்துள்ளன. ஜெயம் ரவி நடித்துள்ள இறைவன், சித்தார்த்தின் சித்தா, ராகவா லாரன்ஸ் நடித்துள்ள சந்திரமுகி 2 ஆகிய படங்கள் வெளியாகி உள்ளன.

tamil industry
தமிழ் திரையுலகம்
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Sep 28, 2023, 11:18 AM IST

Updated : Sep 28, 2023, 12:11 PM IST

சென்னை: வாமனன், என்னென்றும் புன்னகை, மனிதன் உள்ளிட்ட படங்களை இயக்கிய அஹமத், ஜெயம்ரவி நடிப்பில் இறைவன் திரைப்படத்தை இயக்கி உள்ளார். நயன்தாரா நாயகியாக நடிக்கும் இப்படத்திற்கு யுவன்சங்கர் ராஜா இசையமைத்து உள்ளார். க்ரைம் த்ரில்லர் களமாக அமைந்த இந்த திரைப்படம் இன்று (செப். 28) தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் வெளியாகி உள்ளது.

பண்ணையாரும் பத்மினியும், சேதுபதி, சிந்துபாத் போன்ற திரைப்படங்களை இயக்கிய S.U.அருண் குமார் இயக்கத்தில், சித்தார்த் நடிப்பில் உருவாகி உள்ள சித்தா திரைப்படமும் இன்று வெளியாகி உள்ளது. பின்னணி இசையை விஷால் சந்திரசேகரும், படத்திற்கான பாடல்களை திபு நிணன் தாமஸும் உருவாக்கி உள்ளனர். சித்தப்பா மகள் உறவை பற்றி பேசும் படமாக உருவாகி உள்ள இந்த படத்தை நடிகர் சித்தார்த்தே தயாரித்து நடித்துள்ளார்.

இயக்குநர் பி.வாசு இயக்கத்தில் 65வது படமாக சந்திரமுகி 2 உருவாகி உள்ளது‌. இதில் ராகவா லாரன்ஸ், கங்கனா ரனாவத், வடிவேலு, ராதிகா சரத்குமார், மகிமா நம்பியார், லட்சுமி மேனன், சிருஷ்டி டாங்கே , சுபிக்ஷா கிருஷ்ணன் உள்ளிட்ட பலர் நடித்து இருக்கிறார்கள். இசை அமைப்பாளர் எம்.எம். கீரவாணி இசையமைத்து உள்ள திரைப்படம் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி ஆகிய மொழிகளில் இன்று (செப். 28) திரைக்கு வந்துள்ளது. இப்படத்திற்கு மிகப் பெரிய எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க:விரைவில் பருவமழை! நெல் மூட்டைகளை குடோன்களுக்கு அனுப்ப கோரிக்கை! அரசு விரையுமா என எதிர்பார்ப்பு!

Last Updated : Sep 28, 2023, 12:11 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.