சென்னை: கர்நாடக மாநிலம் மங்களூரில் உள்ள தனியார் பள்ளியில் மூன்று சிறுமிகள், அங்குள்ள விடுதியில் தங்கி 11 ஆம் வகுப்பு படித்து வருகின்றனர். இந்நிலையில் கடந்த செவ்வாய்கிழமை (செப் 20) அன்று இரவு 11 மணியளவில் மூன்று சிறுமிகளும் மங்களூரில் இருந்து புறப்பட்டு நேற்று (செப் 23) இரவு 11.30 மணியளவில் சென்னை கோயம்பேடு பேருந்து நிலையத்திற்கு வந்துள்ளனர்.
இதனையடுத்து சிறுமிகள் மூவரும் அங்கிருந்து வேறு இடத்திற்கு செல்வதற்காக ஆட்டோவில் ஏறியுள்ளனர். சிறுமிகளின் மீது சந்தேகம் ஏற்பட்ட ஆட்டோ ஓட்டுநர், சிறுமிகளை கே11 காவல் நிலையத்தில் ஒப்படைத்துள்ளார்.
தொடர்ந்து சிறுமிகளிடம் விசாரணை மேற்கொள்ளப்பட்ட பிறகு, சிறுமிகள் மூவரையும் செனாய் நகரில் உள்ள குழந்தைகள் நலக்குழும விடுதியில் காவல்துறையில் ஒப்படைத்தனர். மேலும் மூன்று சிறுமிகளும் காணாமல் போனது தொடர்பாக மங்களூரில் உள்ள கன்கன்டே காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: சினிமா ஆசைக்காட்டி ஆபாச படமெடுத்த இருவர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது