சென்னை: தமிழ்நாடு மருத்துவம், மக்கள் நல்வாழ்வு துறை அமைச்சர் மா. சுப்ரமணியன், தாம்பரத்தில் தனியார் மருத்துவமனையை திறந்துவைத்தார். இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்து பேசினார்.
அப்போது, “தமிழ்நாட்டில் உள்ளாட்சி அமைப்புகள், காவல்துறை மற்றும் மக்கள் நல்வாழ்வு துறையினர் ஆகியோர் கரோனா ஒழிப்பு பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். உலகம் முழுவதும் கரோனா தொற்று பல்வேறு அச்சுறுத்தல்களை ஏற்படுத்தி வருவதோடு ஆயிரக்கணக்கானோர் உயிரிழந்து வருகின்றனர்.
இதனால் கரோனா தொற்றிலிருந்து விடுபட்டு விட்டோம் என்ற எண்ணம் யாருக்கும் வரக்கூடாது. இன்னும் ஓராண்டு காலமாவது முகக்கவசம், தகுந்த இடைவெளி உள்ளிட்ட பாதுகாப்பு விதிமுறைகளை கடைபிடிக்க வேண்டும்.
மழைகாலம் தொடங்குவதை தொடர்ந்து 300க்கும் மேற்பட்டோர் டெங்குவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவருகின்றனர். டெங்கு போன்ற நோய்களில் இருந்து பாதுகாக்க அனைத்து பகுதிகளிலும் தண்ணீர் தேங்காமல் சீர்செய்து, மருந்துகள் தெளித்து பல்வேறு மழைகால தொற்றுக்கான பாதுகாப்பு நடவடிக்கை மேற்கொள்ளபட்டுள்ளது” எனத் தெரிவித்தார்.
இதையும் படிங்க: பெண் குழந்தைகள் பாதுகாப்பு திட்டத்தில் குடும்பக் கட்டுப்பாடு வயது வரம்பு உயர்வு!