ETV Bharat / state

Pongal: சென்னையில் மது அருந்தி வாகனம் ஓட்டியதாக 359 பேர் மீது வழக்குப்பதிவு

author img

By

Published : Jan 16, 2023, 5:12 PM IST

Pongal: சென்னையில் பொங்கல் கொண்டாட்டத்தையொட்டி நடத்தப்பட்ட வாகன சோதனையில் மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டிய குற்றத்திற்காக 359 வழக்குகளும் பதிவு செய்யப்பட்டு, மொத்தம் 536 வாகனங்களும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

பொங்கல்...சென்னையில் மது அருந்தி வாகனம் ஓட்டியதாக 359 வழக்குப்பதிவு

Pongal: சென்னையில் பொங்கல் கொண்டாட்டம் எவ்வித அசம்பாவிதமும் நடக்காமல், மகிழ்ச்சியுடன் அமைவதற்கும், சென்னை காவல்துறை சார்பில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. முக்கியமாக பொங்கல் கொண்டாட்டத்தின்போது கடற்கரைகள், வழிபாட்டுத் தலங்கள் உள்ளிட்ட பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டன.

நேற்று பொங்கல் கொண்டாட்டத்தை முன்னிட்டு மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டுவதைத் தடுக்கவும், இருசக்கர வாகனங்களில் பந்தயங்களில் ஈடுபடுபவர்களைத் தடுக்கவும், அதிவேகமாகவும், அபாயகரமாகவும் வாகனம் ஓட்டுபவர்களைத் தடுக்கவும்; 190 இடங்களில் போக்குவரத்து காவல் துறையினர் மற்றும் சட்டம் ஒழுங்கு காவல் துறையினர் இணைந்து வாகனத் தணிக்கையில் ஈடுபட்டனர்.

இதையடுத்து நேற்று இரவு 5,904 வாகனங்களை சோதனை செய்து இதில் மது அருந்தி விட்டு வாகனம் ஓட்டிய குற்றத்திற்காக 376 வாகன ஓட்டிகள் மீது வழக்குப்பதிவு செய்தனர். தலைக்கவசம் அணியாமல் இருசக்கர வாகனத்தில் பயணித்தல், வாகனங்களும் இருசக்கர வாகனத்தில் 3 பேர் பயணம் செய்தல், இருசக்கர வாகனத்தை அதிவேகமாக அபாயகரமாக ஓட்டுதல் போன்ற இதர போக்குவரத்து விதிமீறல்களில் ஈடுபட்ட 359 வழக்குகளும் பதிவு செய்யப்பட்டன.மொத்தம் 536 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

சென்னை பெருநகரில் பொதுமக்கள் பொங்கல் பண்டிகையை சிறப்பாகவும், மற்றவர்களுக்கு சிரமமின்றியும் எவ்வித அசாம்பாவித சம்பவங்கள் நிகழாமல், விபத்தில்லாமலும் மகிழ்ச்சியுடன் கொண்டாட சென்னை காவல் துறையினர், எடுத்த முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மற்றும் விரிவான அனைத்து பாதுகாப்பு ஏற்பாடுகளையும் சிறப்பாக செய்ததின் காரணமாக, பொதுமக்கள் அமைதியாகவும் சிறப்பாகவும் பொங்கல் பண்டிகையை கொண்டாடி மகிழ்ந்தனர்.

வாகன ஓட்டிகள் போக்குவரத்து விதிமுறைகளை மதித்து வாகனங்களை ஓட்டுமாறும்; மேலும் மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டுபவர்கள் மீதும், அதிவேகமாகவும், அபாயகரமாகவும், பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையிலும், ரேஸ் போன்ற பந்தயங்களில் ஈடுபட்டு வாகனம் ஓட்டுபவர்கள் மீது நடவடிக்கை எடுத்து, வாகனங்கள் பறிமுதல் செய்யப்படும் என சென்னை காவல்துறை எச்சரித்துள்ளது.

மேலும் இதே போன்று அடுத்த இரண்டு நாட்களுக்கும் சட்டம் ஒழுங்கு மற்றும் போக்குவரத்து காவல்துறையினரால் தொடர்ந்து வாகனத் தணிக்கைகள் மேற்கொண்டு, போக்குவரத்து விதி மீறல்களில் ஈடுபடுவர்கள் மீதும்; பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தி, அச்சுறுத்தும் வகையிலும் வாகனம் ஓட்டுபவர்கள் மீது சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என சென்னை காவல்துறை சார்பாக கடுமையாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க:டெல்லியில் பாஜக தேசிய செயற்குழு கூட்டம் தொடக்கம்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.