வாஷிங்டன்: அமெரிக்காவைச் சேர்ந்த கணினி தகவல் அமைப்பு (Computer information System) பயிலும் மாணவி துருவி படேல், இந்தியாவுக்கு வெளியே நடத்தப்படும் 'உலகளாவிய மிஸ் இந்தியா 2024' போட்டியின் வெற்றியாளராக அறிவிக்கப்பட்டுள்ளார்.
இந்தியாவுக்கு வெளியே மிக நீண்ட காலமாக நடத்தப்படும் இந்தப் போட்டியில் வெற்றி பெற்ற துருவி படேல், தான் பாலிவுட் நடிகையாகவும், யுனிசெஃப் தூதராகவும் வர விரும்புவதாக தெரிவித்துள்ளார். அமெரிக்காவின் நியூஜெர்ஸி மாகாணத்தில் உள்ள எடிசன் பகுதியில் நடைபெற்ற இப்போட்டியில் வெற்றி பெற்ற பின்னர் அவர் மேலும் கூறுகையில், "உலக அளவில் 'மிஸ் இந்தியா' பட்டத்தை வென்றது ஒரு நம்ப முடியாத கவுரவம். இது மகுடத்தை விட மேலானது. எனது பாரம்பரியம், எனது மதிப்புகள் மற்றும் உலக அளவில் மற்றவர்களை ஊக்குவிக்கும் வாய்ப்பை இந்த வெற்றி குறிக்கிறது" என்றார்.
VIDEO | Dhruvi Patel, a Computer Information System student from USA, has been declared as the winner of Miss India Worldwide 2024, the longest running Indian pageant outside India.
— Press Trust of India (@PTI_News) September 20, 2024
READ: https://t.co/uUWwqEGEE3
(Full video available on PTI Videos - https://t.co/n147TvqRQz) pic.twitter.com/z3ZLY7zwba
இப்பிரிவில் சுரினாமைச் (தென் அமெரிக்கா) சேர்ந்த லிசா அப்டோல்ஹாக் இரண்டாம் இடமும், நெதர்லாந்தைச் சேர்ந்த மாளவிகா ஷர்மா மூன்றாவது இடமும் பிடித்தனர்.
இதேபோல், 'மிஸ்சஸ்' பிரிவில் டிரினிடாட் மற்றும் டொபாகோவைச் (கரீபியன் தீவு நாடு) சேர்ந்த சுவான் மவுட்டெட் முதலிடமும், சினேகா நம்பியார் இரண்டாம் இடத்தையும், இங்கிலாந்தைச் சேர்ந்த பவன்தீப் கவுர் மூன்றாம் இடத்தையும் பிடித்தனர்.
'உலகளாவிய மிஸ் டீன் இந்தியா' பிரிவில் குவாடலூப்பைச் (பிரான்ஸ்) சேர்ந்த சியரா சுரேட் மகுடம் சூடினார். நெதர்லாந்தைச் சேர்ந்த ஸ்ரேயா சிங், சுரினாமைச் சேர்ந்த ஷ்ரதா டெட்ஜோ ஆகியோர் முறையே இரண்டாவது மற்றும் மூன்றாவது இடங்களைப் பிடித்தனர்.
நியூயார்க்கைச் சேர்ந்த இந்திய - அமெரிக்கர்களான நீலம், தர்மாத்மா சரண் ஆகியோர் தலைமையிலான குழுவினரால் 31வது ஆண்டாக இந்த போட்டிகள் நடத்தப்பட்டன.