ETV Bharat / state

அக்.27-ல் தமிழக வெற்றிக் கழகம் முதல் மாநில மாநாடு - விஜய் அறிவிப்பு! - Tamilaga Vettri Kazhagam Maanaadu - TAMILAGA VETTRI KAZHAGAM MAANAADU

நடிகர் விஜய் தொடங்கியுள்ள தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு அக்டோபர் 27ஆம் தேதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

விஜய்
விஜய் (Credits - Jaggadish 'X' Page)
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Sep 20, 2024, 10:18 AM IST

Updated : Sep 20, 2024, 10:51 AM IST

சென்னை: தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களுள் ஒருவர் விஜய். இவர் கடந்த பிப்ரவரியில் ‘தமிழக வெற்றிக் கழகம்’ என்னும் கட்சியைத் தொடங்கினார். இதனையடுத்து, இக்கட்சியை பதிவு செய்யப்பட்ட கட்சியாக இந்திய தேர்தல் ஆணையம் அங்கீகரித்துள்ளதாக விஜய் தெரிவித்தார்.

மேலும், கடந்த மாதம் தமிழக வெற்றிக் கழகத்தின் கொடி மற்றும் பாடலை விஜய் சென்னையில் அறிமுகப்படுத்தினார். இது அப்போது பேசுபொருளானது. மேலும், தவெகவின் முதல் மாநில மாநாடு குறித்து உரிய நேரத்தில் அறிவிப்பேன் எனவும் விஜய் தெரிவித்திருந்தார்.

இதனையடுத்து, விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியில் செப்டம்பர் 23 அன்று தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு நடத்துவதற்கு அக்கட்சியின் பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த் அனுமதி கோரினார். இதற்கு விழுப்புரம் காவல்துறை சில நிபந்தனைகளுடன் அனுமதியும் அளித்தது. இருப்பினும், மாநாடு தேதியில் மாற்றம் ஏற்படுவதாக தகவல் வெளியானது.

இந்த நிலையில், தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், “தமிழக வெற்றிக் கழகத்தின் கொடி அறிமுகப்படுத்திய நாள் முதல், நம் கட்சித் தோழர்களின் எண்ணங்களுக்கு ஏற்பவும், தமிழ்நாட்டு மக்களின் பேரன்புடனும், பேராதரவுடனும் நமது அரசியல் வெற்றிக்கான களம் விரிவடைந்து கொண்டே வருகிறது.

இதையும் படிங்க: துணை முதல்வர் டூ விஜய் அரசியல்.. இரண்டுக்கும் பளிச்சுனு பதில் சொன்ன உதயநிதி!

கட்சிக் கொடியேற்று விழாவின்போது, நமது முதல் மாநில மாநாட்டுத் தேதியை அறிவிப்பதாகக் கூறியிருந்தோம். நமது மக்களின் பெரும் எதிர்பார்ப்புகளை நிறைவேற்றும் வகையில், தமிழக அரசியல் களத்தில் புதிய நம்பிக்கையை விதைக்கக்கூடிய நமது கட்சியின் கொள்கைத் தலைவர்கள், கொள்கைகள் மற்றும் கொள்கை சார்ந்த செயல் திட்டங்களைப் பிரகடனப்படுத்தும் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு, வருகின்ற அக்டோபர் மாதம் 27ஆம் தேதி (27.10.2024) மாலை 4 மணி அளவில் விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி அருகே உள்ள வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளது என்பதைப் பெருமகிழ்வுடன் தெரிவித்துக்கொள்கிறேன்.

நமது வெற்றிக் கொள்கை மாநாடு, நம்மை வழிநடத்தப் போகும் கொள்கைகளையும், நாம் அடையப் போகும் இலக்குகளையும் முழங்கும் அரசியல் திருவிழாவாகவும், பெருவிழாவாகவும் கொண்டாடப்படவுள்ளது. தமிழக மக்களின் மனங்களைத் தீர்க்கமாக வெல்லும் நோக்கில் அமையவுள்ள மாநாட்டிற்கான ஆயத்தப் பணிகள் ஏற்கெனவே நடந்துவரும் நிலையில், அதற்கான களப்பணிகளும் தொடங்கப்பட உள்ளன என்பதையும் உங்களிடம் பகிர்ந்துகொள்கிறேன்.

இந்த மாநாட்டில் இருந்து வலிமையான அரசியல் பெரும்பாதையை அமைப்போம். இந்நிலையில், நமது முதல் மாநில மாநாட்டை எல்லா வகையிலும் வெற்றிகரமாக நடத்துவதற்காக, தமிழ்நாட்டு மண்ணைச் சேர்ந்த மகனாக, ஒட்டுமொத்த தமிழ்நாட்டு மக்களின் ஆதரவையும் ஆசிகளையும் உரிமையுடன் வேண்டுகிறேன். விரைவில் சந்திப்போம், வாகை சூடுவோம்” எனத் தெரிவித்துள்ளார்.

Last Updated : Sep 20, 2024, 10:51 AM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.