வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில் தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களிலும் கனமழை பெய்துவருகிறது. மழைக் காரணமாக பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளதோடு வீட்டிலேயே முடங்கி கிடக்கும் சூழல் ஏற்பட்டுள்ளது.
இந்திய வானிலை ஆய்வு மையம் நேற்று வெளியிட்ட அறிவிப்பின்படி, தென் தமிழ்நாட்டில் பரவலாகவும், வட தமிழ்நாட்டில் ஓரிரு இடங்களிலும் கனமழை பெய்யக்கூடும் என்று தெரிவித்திருந்தது. இதனால் இன்றும், நாளையும் தமிழ்நாடு, புதுச்சேரியில் கனமழைக்கு வாய்ப்புள்ளது என்றும் எச்சரிக்கை விடுத்திருந்தது. மன்னார் வளைகுடா, லட்சத்தீவுகள், தென்மேற்கு வங்கக்கடல், இலங்கையை ஒட்டியுள்ள கடல் பகுதிகளில் சூறைக்காற்று வீசக்கூடும் என்பதால் மீனவர்கள் அடுத்த இரண்டு நாட்களுக்கு கடலுக்குள் செல்ல வேண்டாம் என்றும் அறிவுறுத்தப்பட்டிருந்தது.
தொடர் மழைக் காரணமாக நேற்று ஏழு மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை விடப்பட்டிருந்தது. இன்றும் அரியலூர், சிவகங்கை, ராமநாதபுரம் பெரம்பலூர், தூத்துக்குடி, திருவாரூர் மற்றும் புதுக்கோட்டை ஆகிய ஏழு மாவட்டங்களில் இன்று பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அளிக்கப்படுவதாக அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் உத்தரவிட்டுள்ளனர்.
மேலும் கடலூர், சிதம்பரம், வடலூர் ஆகிய கல்வி மாவட்ட பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அளித்து ஆட்சியர்கள் உத்தரவிட்டுள்ளனர்.
இதையும் படிங்க: விடிய விடிய கனமழை; சாலைகளில் தேங்கிய மழை நீர்