தமிழ்நாடு பட்ஜெட் (வரவு-செலவுத் திட்ட அறிக்கை) வரலாற்றில் முதல்முறையாக இன்று (ஆகஸ்ட் 13) காகிதமில்லா வரவு-செலவு திட்ட அறிக்கை தாக்கல் செய்யப்படுகிறது. இதனை, நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தாக்கல் செய்கிறார்.
மு.க. ஸ்டாலினின் ஆட்சியில் இது முதல் வரவு-செலவு திட்ட அறிக்கை என்பதால் இந்த பட்ஜெட்டில் பல்வேறு திட்டங்களுக்கு நிதி ஒதிக்கீடு செய்யப்படுகிறது.
இந்நிலையில், சட்டப்பேரவை உறுப்பினர் தொகுதி மேம்பாடு நிதியாக நடப்பாண்டு முதல் மீண்டும் மூன்று கோடி ரூபாய் அளிக்கப்படும் என பட்ஜெட் தாக்கலில் நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: தமிழ்நாடு பட்ஜெட் உரை: மீண்டும் வழங்கப்பட உள்ள ’கலைஞர் செம்மொழித் தமிழ் விருது’!