ETV Bharat / state

சென்னை ஐஐடியில் டிஜிட்டல் நுண்ணறிவு மற்றும் ஹார்டுவேர் மையம் துவக்கம் - V Kamakodi

சென்னை ஐஐடியில் டிஜிட்டல் நுண்ணறிவு மற்றும் ஹார்டுவேர் மையம் துவக்கம் உள்பட 3 புதிய மையங்கள் தொடங்கப்பட்டுள்ளன.

சென்னை ஐஐடியில் 3 புதிய மையங்கள் திறப்பு

author img

By

Published : Apr 27, 2023, 9:27 PM IST

சென்னை ஐஐடி இயக்குனர் காமகோடி செய்தியாளர் சந்திப்பு

சென்னை: சென்னை ஐஐடியில் வீணா மற்றும் பிரதாப் சுப்ரமணியம் டிஜிட்டல் நுண்ணறிவு மற்றும் ஹார்டுவேர் பாதுகாப்பு மையம், பிசிபி அசெம்பிளி மையம் மற்றும் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தை ஆய்வு செய்யும் மையம் ஆகியவற்றை, இன்று (ஏப்ரல் 27) சென்னை ஐஐடி இயக்குநர் காமகோடி திறந்து வைத்தார்.

இதனையடுத்து செய்தியாளர்களைச் சந்தித்த சென்னை ஐஐடி இயக்குநர் காமகோடி, “இந்தியாவிற்கு தற்போது முக்கியமாக ஹார்டுவேர் வடிவமைப்பு, பிசிபி அசெம்பிளி மற்றும் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் ஆகிய மூன்றும் தேவைப்படுகிறது. எனவே, சென்னை ஐஐடியில் ஹார்டுவேர் வடிவமைப்பு, பிசிபி அசெம்பிளி மற்றும் செயற்கை நுண்ணறிவு தொழில் நுட்பம் ஆகிய மையங்களைத் தொடங்கி உள்ளோம்.

சக்தி மைக்ரோ பிராசஸர் டிஜிட்டல் இந்தியா என்ற திட்டத்தின் கீழ்தான், மைக்ரோ பிராசஸர் டெவலப்மென்ட் நடந்து கொண்டு இருக்கிறது. ஒவ்வொரு டிவைசிலும் பயன்படுத்தும்போது, பல பில்லியன் மைக்ரோ பிராசஸர் இந்தியாவிற்குத் தேவை. எனவே, தொழில் முனைவோர்களை உருவாக்க ஹார்டுவேர் மையம் தொடங்கப்பட்டது. அதனைத் திறந்துள்ளோம்.

டிஜிட்டல் இந்தியா திட்டத்தில், நிறைய தொழில் நிறுவனங்கள் நாட்டிற்குத் தேவையானவற்றை உற்பத்தி செய்து விற்பனை செய்வதற்கு முக்கியமானது. இந்த மையத்திற்கு சென்னை ஐஐடியில் 1985ஆம் ஆண்டில் படித்த முன்னாள் மாணவர் பிரதாப் சுப்பிரமணியன் 1 மில்லியன் டாலர் நிதியுதவி வழங்கி உள்ளார்.

செல்போனில் உள்ள மதர்போர்டு அசெம்பிளி செய்வதற்கும், அதன் செயல்பாடுகள் குறித்தும் தெரிந்து கொண்டு, இந்தியாவில் வேலை வாய்ப்பினை உருவாக்கும் வகையில் பிசிபி அசெம்பிளி சென்டர் உருவாக்கப்பட்டுள்ளது. இதனை ஐஐடி மாணவர்களும், பிற மாணவர்களும் தொழில்நுட்பத்தை கற்றுக்கொண்டு வேலை வாய்ப்பினை பெறும் வகையில் தொடங்கப்பட்டுள்ளது. செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தில் ஒரு பொறுப்புத்தேவையாக இருக்கிறது.

செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தின் மூலம் அளிக்கப்படும் தகவல்கள் சரியாக உள்ளதா என்பதையும் ஆய்வு செய்ய உள்ளோம். வேலை வாய்ப்புகளை உருவாக்கவும், நாட்டின் வளர்ச்சிக்கும் இந்த மையம் உதவியாக இருக்கும். சக்தி மைக்ரோ பிராசஸர் வணிகப் பயன்பாட்டிற்காக 5 தொழில் முனைவோர் மூலம் தொடங்கி உள்ளோம்.

ஸ்டார்ட்அப் வணிக ரீதியாகப் பயன்படுத்த 6 மாதங்களில் பயன்பாட்டுக்கு வரும். அடுத்த 2 ஆண்டுகளுக்கு 6 முதல் 8 ஷிப் பயன்பாட்டிற்கு வரும். செமி கன்டக்டர் தட்டுப்பாடு கரோனா முடிந்த காலத்தில் தொடங்கியது. தற்போது தட்டுப்பாடு குறைந்து, தட்டுப்பாடு இல்லாத நிலைக்கு வந்து கொண்டு இருக்கிறது.

கரோனா காலத்தில் லேப்டாப் வாங்குவதற்கு 2 மாத காலம் காத்திருக்க வேண்டி இருந்தது. தற்போது குறைந்து வருகிறது. உலக அளவில் இந்த நிதியாண்டில் குறையும் என்பது எதிர்பார்ப்பு. அதற்கான அறிகுறிகள் தெரிகிறது. இந்தியாவில் 40 நானோ மீட்டர் தொழில்நுட்பத்தைக் கொண்டு வருகின்றனர். இதனால் வரும் காலத்தில் செமி கன்டக்டர் தட்டுப்பாடு இருக்காது” எனத் தெரிவித்தார்.

இதையும் படிங்க: நிலவில் தரையிறங்கும் தனியார் விண்வெளி நிறுவனத்தின் முயற்சி தோல்வி! நூலிழையில் வரலாற்று சாதனை தகர்ப்பு!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.