ETV Bharat / state

செல்போன் சர்வீஸ் கடையில் கொள்ளை - 3 பேர் கைது

author img

By

Published : Jan 24, 2022, 7:32 AM IST

சோழிங்கநல்லூரில் செல்போன் சர்வீஸ் கடையில் பூட்டை உடைத்து செல்போன்கள் மற்றும் பணத்தை கொள்ளையடித்த மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

செல்போன் சர்வீஸ் கடையில் பூட்டை உடைத்து கொள்ளையடித்த மூவர் கைது

சென்னை: சோழிங்கநல்லூர் கங்கை அம்மன் கோயில் தெருவைச் சேர்ந்தவர் ராஜேஷ்(30) இவர் அதே பகுதியில் இந்திரா தெருவில் செல்போன் சர்வீஸ் கடை வைத்து நடத்தி வருகிறார்.

கடந்த 13-ஆம் தேதி இரவு கடையைப் பூட்டிவிட்டு வீட்டிற்குச் சென்ற ராஜேஷ் மறுநாள் காலை வழக்கம் போல் கடையைத் திறக்க வந்தபோது கடையின் பூட்டு உடைக்கப்பட்டு இருந்ததைக் கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

பின்னர் உள்ளே சென்று பார்த்தபோது, கடையில் இருந்த இரண்டு லேப்டாப், 13 செல்போன்கள், மூன்று வாட்சுகள், ஒரு ஸ்பீக்கர் பாக்ஸ் மற்றும் கடையில் வைத்திருந்த ரூபாய் 3500 ரூபாய் ரொக்கம் கொள்ளை போனது தெரியவந்தது.

இதுகுறித்து ராஜேஷ் செம்மஞ்சேரி காவல்நிலையத்தில் புகார் அளித்தார். அதன் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர், கடையிலிருந்த சிசிடிவி காட்சிகளை கைப்பற்றி விசாரணை மேற்கொண்டு வந்தனர். மேலும், கைரேகை நிபுணர்களை வரவழைத்து சோதனை செய்தனர்.

இந்நிலையில் செம்மஞ்சேரி காவல்துறையினர் சோழிங்கநல்லூர் காந்திநகர் ஏரிக்கரை பகுதியில் வாகன தனிக்கையில் ஈடுபட்டபோது, சந்தேகத்திற்கிடமாக இருசக்கர வாகனத்தில் வந்த மூன்று பேரை மடக்கிப் பிடித்து விசாரணை செய்தனர்.

அப்போது மூவரும் முன்னுக்குப் பின் முரணாகப் பதில் அளித்ததால் சந்தேகம் அடைந்த காவல்துறையினர், மூவரையும் காவல் நிலையம் அழைத்துச் சென்று விசாரித்த போது ஆவடியைச் சேர்ந்த சதீஷ்குமார் என்கிற டாட்டு சதீஷ்(21), சஞ்சய் என்கிற சைக்கோ சஞ்சய்(23), ராகேஷ்(21) என தெரியவந்தது.

அவர்கள் சோழிங்கநல்லூர் செல்போன் சர்வீஸ் கடையில் பூட்டை உடைத்துக் கொள்ளையடித்ததை ஒப்புக்கொண்டுள்ளனர். மேலும் அவர்கள் மீது செம்மஞ்சேரி காவல் நிலையத்தில் ஏற்கனவே குற்ற வழக்குகள் நிலுவையில் இருப்பது தெரியவந்தது.

இதையடுத்து செல்போன் சர்வீஸ் கடையில் திருடிய பொருட்கள் அனைத்தையும் மீட்ட காவல்துறையினர் மூவர் மீதும் வழக்குப் பதிவு செய்து நீதிபதி முன் முன்னிறுத்தி சிறையில் அடைத்தனர்.

இதையும் படிங்க: எஸ்.வி. சேகருக்கு கரோனா தொற்று!

For All Latest Updates

TAGGED:

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.